தியேட்டரில் கதறவிட்ட ஜீவாவின் 5 மோசமான படங்கள்.. அட்வான்ஸ் கூட வேண்டாம் என தெரிந்த ஓடும் தயாரிப்பாளர்

ஜீவா ஒரு காலத்தில் பல ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தார். ஆனால் சமீபகாலமாக அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் போகவில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் ஜீவா பக்கம் வர மறுக்கிறார்களாம். சில தயாரிப்பாளர்கள் அட்வான்ஸ் கொடுத்த பணமும் இருக்கட்டும் மார்க்கெட் வந்த பிறகு படத்தை பண்ணிக்கலாம் என்று தெரிந்து ஓடி உள்ளாராம். அவ்வாறு ஜீவா சந்தித்த 5 தோல்வி படங்களை பார்க்கலாம்.

ஜிப்ஸி : கடந்த 2020 ஆம் ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில் குதிரை மீது உள்ள அன்பையும், காதலையும் மயமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. மேலும் வசூலிலும் பெருத்த அடி வாங்கியது.

Also Read : அப்பாவுக்கு போட்டியாக களமிறங்கிய ஜீவா.. சின்ன கல்லை போட்டு பெத்த லாபம் பார்க்க போட்ட பிளான்

களத்தில் சந்திப்போம் : கடந்த 2021 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் களத்தில் சந்திப்போம். இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சுமா மோகன் ஆகியோர் நடித்திருந்தனர். களத்தில் சந்திப்போம் என்ற படம் உள்ளதே தெரியாத அளவுக்கு இப்படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.

83 : கடந்த 2021 ஆம் ஆண்டு கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங், கபில் தேவ், ஜீவா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 83. கிரிக்கெட்டை மையமாக வைத்த இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படமும் படுமோசமான தோல்வியை சந்தித்தது.

Also Read : தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்ட 6 நடிகர்கள்.. சாக்லேட் முகத்தால் பரிதவிக்கும் ஜீவா

காபி வித் காதல் : சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் மற்றும் பல பிரபலங்கள் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் காபி வித் காதல். இந்தப் படம் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்திற்கு போட்டியாக வெளியானது. இப்படம் போட்ட வசூலை கூட எடுக்க முடியாமல் தோல்வியை தழுவியது.

வரலாறு முக்கியம் : சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் வரலாறு முக்கியம். ஜீவாவின் இந்த படம் படுமோசமான தோல்வி அடைந்தது. இப்போது வரை இந்த படத்திற்கு தியேட்டர் வெறிச்சோடி காணப்பட்ட வருகிறது. இவ்வாறு ஜீவாவுக்கு சமீபத்தில் வெற்றி கொடுக்கும்படி ஒரு ஹிட் படம் கூட அமையவில்லை.

Also Read : ஜீவா வளர்ச்சியை கெடுத்த 5 படங்கள்.. அதல பாதாளத்திற்குச் சென்ற மார்க்கெட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்