வாரிசு நடிகைகளாக நுழைந்த 5 இயக்குனர்களின் மகள்கள்.. இதுல ரெண்டு பேரு ஃபீல்ட் அவுட்

சினிமா பிரபலங்களின் வாரிசுகள் நடிகர் நடிகைகளாக வலம் வருவது புதிதல்ல. இருப்பினும் பிரம்மாண்ட இயக்குனர்களின் மகள்கள் தற்போது இளம் நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த லிஸ்டில் இருப்பவர்களை பார்ப்போம்.

அதிதி ஷங்கர்: தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். அதன் பிறகு இவர் இயக்கிய முதல்வன், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ ஆகிய படங்கள் இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. இவருடைய மகள் அதிதி. முத்தையா இயக்கத்தில் உருவாகும் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தில் கதாநாயகனாக கார்த்திக் நடிக்க சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளது.

கல்யாணி பிரியதர்ஷன்: திரைத்துறையில் சுமார் 95 படங்களுக்கு மேலாக இயற்றியவர் தான் இயக்குனர் பிரியதர்ஷன். 80களில் மலையாளத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பிரியதர்ஷன் நகைச்சுவை படங்களை இயக்குவதில் மூலம் மேலும் பிரபலமானார். இவருடைய இயக்கத்தில் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான காஞ்சிவரம் என்ற படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் போன்ற மொழிகளில் பட்டையைக் கிளப்பிய இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் தான் கல்யாணி பிரியதர்ஷன். தமிழ் சினிமாவில் ஹீரோ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள மாநாடு  படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜயலட்சுமி: தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு அஜித்தின் காதல் கோட்டை என்ற திரைப்படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் திரைக்கதை எழுதியதன் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் அகத்தியன். அவருடைய மகள் தான் விஜயலட்சுமி.

இவர் சென்னை 600028 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வந்தார் விஜயலட்சுமி. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் கலந்து கொண்ட பிரபலமானார். ஆனால் முன்னணி நடிகையாக வளர முடியவில்லை. இதனால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன விஜயலட்சுமிக்கு தற்போது ஒரு மகன் உள்ளார்.

directors daughters-cinemapettai
directors daughters-cinemapettai

ஐஸ்வர்யா: தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஆக்ஷன் ஹீரோவாக அறியப்பட்டவர் தான் அர்ஜுன். மற்ற நடிகர்களை காட்டிலும் அர்ஜுன் படங்களில் ஆக்ஷன் காட்சிகள் மிக அருமையாக இருக்கும். வயது 58 தாண்டினாலும் தற்போது வரை தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் ஹீரோவாக கலக்கியவர் சமீபகாலமாக வில்லன் வேடங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். அதுமட்டுமில்லாமல் அவரது வில்லத்தனமான கதாபாத்திரங்களை ரசிகர்கள் வெறித்தனமாக ரசிக்கின்றனர். அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, விஷால் நடித்த பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். சமீபத்தில் அர்ஜுன் இயக்கத்தில் வெளிவந்த சொல்லிவிடவா படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஸ்ருதி ஹாசன்: தமிழ் திரையுலகின் ஜாம்பவானான நடிகராக மட்டுமல்லாமல் விருமாண்டி, ஹேராம், விஸ்வரூபம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராகவும் வலம் வந்த கமல்ஹாசன். அவருடைய மகள் தான் ஸ்ருதி ஹாசன். இவர் ‘ஏழாம் அறிவு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கால்பதித்தார்.

ஸ்ருதி ஹாசன் நடிகை இசையமைப்பாளர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். கே.ஜி.எஃப் இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில், விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் சமீபத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஐஸ்வர்யா,விஜயலட்சுமி சினிமாவை விட்டு ஒதுங்கி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.