முல்லைக்காக படாத பாடு படும் கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அதிரடி திருப்பம்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனக்கு குழந்தை இல்லை என்ற குறையை தீர்ப்பதற்காக முல்லை கோயில் கோயிலாக ஏறி இறங்கி தன்னையே வருத்திக் கொள்வதை குடும்பத்தினர்கள் பார்க்க முடியாததால் அவளுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்ய வைக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் முடிவெடுத்திருக்கிறது.

இதற்காக மூர்த்தி பார்க்கும் இடமெல்லாம் வட்டிக்கு கடன் வாங்கி ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை திரட்டி கதிர் இடம் கொடுத்து சிகிச்சைக்காக தேவைப்படும் மருத்துவ செலவை பார்க்கச் சொல்கிறான். இதனால் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்வதற்காக இன்று மருத்துவமனை செல்லும் முல்லைக்கு கருப்பையில் சேர்க்கையாக வளர்ந்த கருவை செலுத்தி இருக்கின்றனர்.

எனவே இந்த சிகிச்சை மேற்கொண்ட பிறகு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு ஆட்டோவில் முல்லையை பக்குவமாக அலுங்காமல் குலுங்காமல் அழைத்து சென்று வருகிறார்கள்.

வரும் வழியில் மேடு பள்ளம் இருப்பதால் ஆட்டோ டிரைவர் பொறுப்பில்லாமல் ஓட்டுவதால் கதிரே அந்த ஆட்டோவை ஓட்டி முல்லையை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வருகிறான்.

இவ்வாறு முல்லைக்காக ஆட்டோ ஓட்டுனராக மாறியது மட்டுமின்றி அவளை நடக்கவிடாமல் பாத்ரூமிற்கு கூட தூக்கிக் கொண்டு செல்லும் காட்சி கதிர், முல்லை மேல் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் படாதபாடுபட்டு முல்லைக்காக 5 லட்சம் செலவு செய்து செயற்கை முறையில் கருத்தரிக்க செய்த இந்த முயற்சி வெற்றிபெற வேண்டும் என பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மட்டுமல்ல சின்னத்திரை ரசிகர்களும் விரும்புகின்றனர்.

Next Story

- Advertisement -