ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நீ எப்போ குழந்தை பெத்துக்க போற முல்லை.. பாண்டியன் ஸ்டோரில் வெடிக்கும் அடுத்த பிரச்சனை

பாண்டியன் ஸ்டோர்ஸில் தனத்திற்கு ஒரு வழியாக குழந்தை பிறந்து விட்டது. தற்போது உறவினர்கள் அனைவரும் தனத்தின் குழந்தையை பார்க்க வீட்டிற்கு வருகிறார்கள்.

முதலாவதாக மீனாவின் அம்மாவும், அப்பாவும் குழந்தையை பார்க்க வருகிறார்கள். மீனாவின் அப்பா குழந்தையின் கையில் பணத்தை கொடுக்கிறார். மீனாவின் அம்மா தனத்திடம் தங்க காசு கொடுத்து நகை செய்யும் போது பயன்படுத்திக் கொள் என்று சொல்கிறார்.

அடுத்ததாக முல்லையின் அம்மாவும், அப்பாவும் குழந்தையைப் பார்க்க வருகிறார்கள். அவர்களும் குழந்தைக்கு நகை கொண்டு வந்து தருகிறார்கள். பின் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றனர்.

அப்போது தனத்தின் அண்ணி  கஸ்தூரி மற்றும் முல்லையின் அம்மா இருவரும் முல்லையிடம் தனியாக பேசுகின்றனர். அப்போது கஸ்தூரி நீ எப்ப குழந்தை பெத்துக்க போற,  திருமணமாகி  3 வருடம் ஆகிவிட்டது, உன் உடம்பில் ஏதாவது பிரச்சனையா என்று சீண்டுகிறார்.

அதற்கு முல்லை அப்படியெல்லாம் எதுவும் இல்லை, அக்கா கர்ப்பமாக இருந்ததால் நாங்கள் குழந்தையை தள்ளிப் போட்டுள்ளோம் என்று பதிலளிக்கிறார். உடனே முல்லையின் அம்மா உனக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்று அட்வைஸ் செய்கிறார். இவ்வாறு இன்றைக்கான பாண்டியன் ஸ்டோர்ஸ் காட்சிகள் வெளியாகி உள்ளது. மூணு வருஷம் ஆச்சு பிள்ளை பெத்துகலையா

- Advertisement -

Trending News