புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கார்த்தி படம் தான் புஷ்பா உருவாக காரணம்.. ஓப்பனாக கூறிய அல்லு அர்ஜுன்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் தற்போது பலரும் மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் புஷ்பா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை பற்றி அல்லு அர்ஜுன் தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியிருக்கிறார். அதாவது தமிழ் சினிமாவில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் பருத்திவீரன். முரட்டுத்தனமான ஹீரோ, கிராமத்து பின்னணி என்று இப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்தப் படம் வெளியான பிறகு அந்த கதைக்கருவை மையப்படுத்தி பல கிராமத்து படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. அந்த படத்தை பற்றி நினைவு கூர்ந்த அல்லு அர்ஜுன் பருத்திவீரன் திரைப்படம் சினிமாவில் ஒரு ட்ரெண்டை உருவாக்கியதாக கூறியுள்ளார்.

மேலும் அது போன்று தான் ஒரு படத்தை பண்ணுவதற்கு மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும், அதைப் பற்றி இயக்குனர் சுகுமாரிடம் அடிக்கடி பேசியதாகவும் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில்தான் அவர் ரங்கஸ்தலம் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

அந்தப் படத்திற்குப் பிறகு அதே போன்று கதை அமைப்பில் ஒரு கதை இருப்பதாக சுகுமார் என்னிடம் கூறினார். அந்த கதையை கேட்ட பிறகு இந்த கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால் புஷ்பா படத்தில் நான் நடித்தேன் என்று கூறியுள்ளார்.

இப்படம் இன்னும் சில நாட்களில் திரையில் வெளியாக இருக்கிறது. மேலும் அல்லு அர்ஜுன் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இவர் ஏற்கனவே சுகுமார் இயக்கிய ரங்கஸ்தலம் திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

pushpa-allu-arjun-cinemapettai
pushpa-allu-arjun-cinemapettai
- Advertisement -

Trending News