பிரம்மாண்ட திரைப்படத்தை மீண்டும் தொடங்கும் கமல்.. இந்த முயற்சியாவது கை கூடுமா?

பல வருடங்களுக்கு முன் உலக நாயகன் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் மருதநாயகம். இந்தத் திரைப்படம் அவருடைய கனவு திரைப்படமாகும். இந்தப் படத்துக்கான கதையை அவர் நாவலாசிரியர் சுஜாதாவுடன் இணைந்து எழுதினார்.

1991 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலை 1997 ல் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஷ்ணுவர்தன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படத்தின் பிரம்மாண்டமான தொடக்க விழா எம்ஜிஆர் பிலிம் சிட்டியில் ராணி இரண்டாம் எலிசபெத் தலைமையில் நடைபெற்றது.

மேலும் இப்படம் அந்த காலத்தில் இந்தியாவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. இதன் பட்ஜெட் 80 கோடி ரூபாயாக அறிவிக்கப்பட்டது. இளையராஜா இசையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பல தயாரிப்பு சிக்கல்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பில் இருந்த ஒரு சர்வதேச நிறுவனம் திடீரென்று பின்வாங்கியது. இதனால் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த திரைப்படம் திரும்பவும் ஆரம்பிக்கப்படவில்லை. மருதநாயகம் திரைப்படத்தை ஆர்வத்துடன் எதிர் பார்த்த பலருக்கும் இது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

தற்போது கமல்ஹாசன் மீண்டும் மருதநாயகம் திரைப்படத்தை புதுப்பிக்கும் வேலையில் இறங்கியுள்ளார். கமல் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த தயாரிப்பில் சோனி நிறுவனமும் பங்கேற்றுள்ளது.

அந்த நட்பின் அடிப்படையில் கமல்ஹாசன் தற்போது மருதநாயகம் திரைப்படம் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை ஒரு ப்ராஜெக்ட்டாக தயாரித்து அனுப்பி வைத்துள்ளார். இன்னும் சில கோடிகள் செலவு செய்தால் படத்தை பிரமாண்டமாக தயாரித்து முடித்து விடலாம் என்பது கமலின் திட்டம்.

இப்படி ஒரு பிரம்மாண்டத்தை கமல்ஹாசனால் மட்டுமே நிகழ்த்திக் காட்ட முடியும். ஒரு வகையில் இதுவும் ஒரு நல்ல முயற்சிதான். சோனி நிறுவனம் ஒரு பெரிய கம்பெனி என்பதால் அவர்களால் நிச்சயம் கமல்ஹாசனுக்கு உதவ முடியும். இது நடக்கும் பட்சத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மருதநாயகம் திரைப்படத்தை நாம் விரைவில் காணலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்