மாயாஜாலில் விக்ரம் செய்த மாயாஜாலம்.. சாதனை படைத்த கமல்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் தமிழ் திரைப்படங்களும் வெளியாகவில்லை.

வெளியான படங்களும் பெரிய அளவில் பேசும்படி வெற்றி பெறவில்லை. ஆனால் நான்கு வருடங்களுக்குப் பிறகு திரையில் தோன்றிய உலகநாயகனின் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. அதுவும் பெரிய அளவில் 3 நாட்களில் 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக சென்னையில் உள்ள மாயாஜால் திரையரங்கில் கிட்டத்தட்ட 16 திரையரங்குகள் உள்ளன. அதில் ஒன்று கூட வேறு படங்கள் ஓடாமல் விக்ரம் படத்தை மட்டுமே ஒளிபரப்பு செய்து உள்ளனர். ரசிகர்கள் கொடுக்கும் அமோக வரவேற்பினால் ஒரே நாளில் 100 காட்சிகள் ஒளிபரப்பு செய்துள்ளனர்.

மேலும் அந்த 100 காட்சிகளுமே ஹவுஸ்புல் ஆகி டிக்கெட்டே இல்லாத சூழல் ஏற்படுகிறது. இதுவரைக்கும் எந்த நடிகர் படமும் ஒரே இடத்தில் உள்ள தியேட்டரில் ஒரே நாளில் 100 காட்சிகள் ஒளிபரப்பு செய்தது கிடையாது. மேலும் இந்த அளவிற்கு ஹவுஸ்புல் ஆனது கிடையாது.

கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் மட்டும்தான் இந்த சாதனை படைத்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். விக்ரம் படத்தில் கமலஹாசனுடன் பகத் பாசில் ,விஜய் சேதுபதி, சூர்யா, ஷிவானி நாராயணன், மகேஸ்வரி, காயத்ரி, மைனா நந்தினி என ஒவ்வொருவரும் தங்களுக்கு அட்டகாசமான நடிப்பை வெளிக் காட்டியதால் விக்ரம் படம் சூப்பர் டூப்பர் வெற்றியைக் கண்டு கொண்டிருக்கிறது.

120 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட விக்ரம் படம் வெளியான ஒரு வாரத்திலேயே உலக அளவில் சுமார் 250 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்து, ஏறுமுகத்திலேயே இருக்கும் விக்ரம் இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் கூடிய விரைவில் 500 கோடியை அசால்டாக தாண்டிவிடும் என திரைத்துறையினர் கணித்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்