கிரேசி மோகனால் வெற்றி கண்ட கமலின் 5 படங்கள்.. ஒவ்வொன்னும் வேற ரகம்!

உலக நாயகன் கமலஹாசனுக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெறும். ஆரம்பத்தில் கமலஹாசன் நடித்த பெரும்பாலான படங்களில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இவர் நடிப்பில் அதிக நகைச்சுவை படங்கள் வந்திருந்தாலும் அதில் சில சிறந்த படங்களை பார்க்கலாம்.

மைக்கேல் மதன காமராஜன்: சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கமல், கிரேசி மோகன் இருவரும் திரைக்கதை எழுதி இருந்தனர். கமலஹாசன் இப்படத்தில் நான்கு வேடங்களில் நடித்திருந்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காட்டி இருப்பார் கமல். இப்படத்தில் கிரேசி மோகனின் வசனங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

வசூல்ராஜா எம்பிபிஎஸ்: கமலஹாசன், சினேகா, பிரகாஷ்ராஜ், நாகேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். இப்படத்திற்கும் கிரேஸி மோகன் வசனம் எழுதியிருந்தார். இப்படத்தில் கட்டிப்பிடி வைத்தியம், சிரிப்பு வைத்தியம் என நிறைய காட்சிகளில் கமலஹாசன் ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

தெனாலி: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ஜோதிகா, தேவயானி நடிப்பில் வெளியான திரைப்படம் தெனாலி. இப்படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுதியிருந்தார். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படத்தின் கதாபாத்திரங்கள் முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்தது.

காதலா காதலா: சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கிரேசி மோகன் கதையில் கமலஹாசன், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா, எம் எஸ் விஸ்வநாதன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் காதலா காதலா. கமல் மற்றும் பிரபுதேவா இருவரும் ராமலிங்கம், சுந்தரலிங்கம் ஆக நடித்திருந்தார்கள். இப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

பஞ்சதந்திரம்: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ஜெய்ராம், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான திரைப்படம் பஞ்சதந்திரம். இப்படத்திற்கும் வசனம் கிரேசி மோகன். இப்படத்தில் 5 நண்பர்கள் சேர்ந்து பெங்களூர் செல்கிறார்கள். அங்கு ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு பின் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை பஞ்சதந்திரம். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Next Story

- Advertisement -