செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

கை கால் உடைஞ்சும் திருந்தாமல் நந்தினியை உதாசீனப்படுத்தும் கதிர்.. அந்நியனாக மாறப்போகும் சக்தி

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல், எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பதற்கு ஏற்ப டிஆர்பி ரேட்டிங்கில் பின்னுக்குப் போய்விட்டது. இருந்தாலும் ஒரு சில டுவிஸ்ட்களை காட்டி நாடகத்தை சுவாரஸ்யமாக கொண்டு போகலாம் என்று முயற்சி எடுத்து வருகிறார்கள். ஆனாலும் எந்த பயனும் இல்லை என்பதற்கு ஏற்ப நாடகத்தை பார்க்கும் மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள்.

அதற்கு காரணம் கடந்த இரண்டு வருடங்களாக குணசேகரன் மற்றும் கதிர் எந்த அளவிற்கு பெண்களை அடிமையாக நடத்தி கேவலப்படுத்தினாரோ, அதை தான் உருட்டிக் கொண்டு வருகிறார்கள். போதாக்குறைக்கு தற்போது ஞானம், குணசேகரின் அம்மா, கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி என்ற கூட்டங்களுடன் சேர்ந்து இன்னும் அட்டூழியம் தான் அதிகரித்து இருக்கிறதே தவிர பெண்களின் முன்னேற்றத்திற்கு அடுத்த கட்ட முயற்சியை கொண்டு வரவில்லை.

சும்மா வாயாலேயே வடை சுடுவது மாதிரி ஜனனி மற்றும் அந்த வீட்டில் உள்ள பெண்கள் கோபத்தை மட்டும் தான் காட்டுகிறார்கள் தவிர நடவடிக்கையில் எதுவும் முன்னேற்றம் அடைந்தபாடாக தெரியவில்லை. ஏதாவது ஒரு படி எடுத்து வைத்தாலே பத்து ஸ்டெப்புக்கு பின்னாடி போகிற மாதிரி ஏதாவது ஒரு பிரச்சனையில் போய் முடிந்து விடுகிறது.

Also read: எதிர்நீச்சல் குணசேகரன் பொண்டாட்டி பண்ணிய காரியம்.. ஜெனிலியா, ஸ்ரேயா பேசியது எல்லாம் உண்மை இல்லையா?

இப்படி இருந்தால் பார்ப்பவர்களுக்கு எப்படி தான் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகையில் அண்ணனை விட பல மடங்கு ஆத்திரக்காரனாக இருந்த கதிருக்கு தற்போது புத்தி மாறுகிற மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கதிரை கை கால் உடைத்து அடித்து போட்டு படுத்த படுக்கையாக ஆக்கிவிட்டார் எஸ்கேஆர் இன் தம்பி அரசு. ஆனால் இந்த நிலைமையிலும் நந்தினி மற்றும் மகளிடம் கொடுமை காரணமாகத்தான் பேசுகிறார்.

பொதுவாக சொல்வார்கள் கர்மா திருப்பி அடிக்கும் என்று. அது தற்போது கதிர் விஷயத்தில் நடந்திருக்கிறது. ஆதிரை அருண் கல்யாணம் நடக்கக்கூடாது என்பதற்காக அருணை கை கால் உடைத்து வீட்டில் முடங்கும்படி செய்தது கதிர் தான். அதே தண்டனையை கதிர் அனுபவிக்கனும் என்பதற்காக தற்போது இவரும் ஒரு மூலையில் ஒடுங்கிப்பே கிடைக்கிற மாதிரி நிலை வந்து விட்டது.

இதன் பிறகு தான் கதிர் உண்மையான பாசம், மனைவி மகள் அன்பு என்னவென்று புரியப் போகிறது. இதற்கிடையில் சக்தியை எப்படியாவது தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று குணசேகரன் ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தி வருகிறார். அந்த வகையில் சக்தி மட்டும் அந்நியனாக மாறிவிட்டால் இருக்க கொஞ்சநஞ்ச மரியாதையும் இந்த நாடகத்தின் மேல் இல்லாமல் போய்விடும். அதனால் கதையை கொஞ்சம் வேறு விதமாக மாற்றி அமைத்தால் மக்களிடம் நல்ல வரவேற்பை திரும்ப பெற முடியும்.

Also read: கதையே இல்லாமல் உருட்டும் எதிர்நீச்சல் சீரியல்.. ஹனிமூன் மாதிரி ஜெயிலுக்கு போகும் குணசேகரன்

- Advertisement -

Trending News