Kamalhassan: கமலின் வில்லத்தனத்தால் 1000 கோடி பட்ஜெட்டுக்கு அஸ்திவாரம் போட்ட இயக்குனர்.. ஆரம்பமாக போகும் புது கூட்டணி

Kamalhassan: நடிப்பில் எவராலும் மிஞ்ச முடியாத நம்மவர் நாயகன் தான் உலக நாயகன் கமலஹாசன். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை வெறித்தனமாக நடித்து முடிக்கக்கூடிய திறமை இருக்கிறது. சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். இவருடைய நடிப்பை வியந்து பார்த்தவர்கள் பலரும் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட இவரின் பல படங்கள் தோல்வி அடைந்தாலும் அது இப்பொழுது வரை சாதனை படமாக பேசப்பட்டு வருகிறது. விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் படம் வெளிவர இருக்கிறது. இதற்கிடையில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 AD வில்லன் கதாபாத்திரத்தில் காளி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்த கேரக்டர்காக கமல் 150 கோடி சம்பளத்தை வாங்கி இருக்கிறார். மேலும் இந்த கூட்டணியில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திசா பதானி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.

கமலின் புது கூட்டணி

இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் பிரபாஸ் அடுத்த படத்திற்கான வேலையை பார்க்க போய்விட்டார். இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜூன் மாதம் 27 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அந்த வகையில் இந்தப் படத்தின் கதையை பார்த்த ராஜமவுலி கமலின் வில்லத்தனமான நடிப்பை பார்த்து மெர்சல் ஆகிவிட்டாராம்.

அந்த அளவிற்கு கமலின் கதாபாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் மிரட்டி இருக்கிறார். சும்மாவே கமல், நடிப்பில் பிச்சு உதறுவார். அப்படிப்பட்டவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் கிடைத்தால் சொல்லவா செய்யணும். அதனால் தான் கமலின் வில்லத்தனத்தை பார்த்து ராஜமவுலி வியந்து போய்விட்டார்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் புது படம் ஆரம்பமாக போகிறது. இப்படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் இயக்க வேண்டும் என்று ராஜமவுலி கிட்டத்தட்ட ஆயிரம் கோடி பட்ஜெட்டுக்கு அஸ்திவாரத்தை ஆரம்பித்து விட்டார். இதற்கான பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முடிந்த நிலையில் கமல், தக் லைப் படத்தை முடித்துவிட்டு ராஜமௌலியுடன் கைகோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -