Ilayaraja: எம்.பி-யா இருந்து என்ன பிரயோஜனம்.. இளையராஜாவின் காப்புரிமை சர்ச்சையால் கொந்தளிக்கும் இசையமைப்பாளர்

Ilayaraja: இளையராஜாவின் காப்புரிமை சர்ச்சை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீபத்தில் வெளியான கூலி டைட்டில் டீசரில் அவருடைய இசை பயன்படுத்தப்பட்டிருந்தது.

அதற்காக அவர் இப்போது சன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இது பூதாகரமாக வெடித்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பல கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.

அதன்படி இது போன்ற காப்புரிமை தொகையை பெறுவதற்காகவே ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் உறுப்பினராக இருக்கும் இசையமைப்பாளர்களுக்கு மாதம் தோறும் காப்புரிமை தொகை வந்துவிடுகிறது.

ஆனால் இளையராஜா அந்த அமைப்பில் இருந்து வெளியே வந்து விட்டார். அதுதான் பிரச்சனையே. ஒரு சில படங்களுக்கு இசையமைத்திருக்கும் எனக்கே மாதம் நல்ல வருமானம் கிடைக்கிறது.

அப்படி இருக்கும்போது நீங்கள் ஒரு அமைப்பிடம் இதை கொடுத்து விட்டால் எந்த பிரச்சனையும் இன்றி சம்பாதித்து விட முடியும். தேவையில்லாமல் பணத்தாசை பிடித்தவர், சுயநலக்காரர் என்ற பெயர்களை சம்பாதிக்க வேண்டியதில்லை.

இளையராஜாவை ரோஸ்ட் செய்த இசையமைப்பாளர்

மேலும் ஒரு எம்பி பதவியில் இருக்கும் நீங்கள் இசையமைப்பாளர்களுக்காக எவ்வளவோ செய்திருக்கலாம். இப்போது பதவிக்காலமே முடிய போகிறது. இதுவரை நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்.

ஏ ஆர் ரகுமான் பல இசை கலைஞர்களை உருவாக்கி இருக்கிறார். அதை கூட நீங்கள் செய்ய வேண்டாம். ஆனால் இந்த காப்புரிமை விஷயத்தில் சட்ட திருத்தம் செய்திருக்கலாமே.

அப்படியே செய்திருந்தால் எத்தனையோ பேர் இதன் மூலம் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் இப்போதும் உங்களுக்காக மட்டும் தான் போராடுகிறீர்கள் என இளையராஜாவை ரோஸ்ட் செய்துள்ளார்.

இது பரபரப்பாகி வரும் நிலையில் இசைஞானியின் மீது சில விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆனால் இந்த உரிமை போராட்டம் நியாயமானது என அவர் தரப்பிலிருந்து வழக்கறிஞர் விளக்கம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -