எதிர்நீச்சல் குணசேகரன் பொண்டாட்டி பண்ணிய காரியம்.. ஜெனிலியா, ஸ்ரேயா பேசியது எல்லாம் உண்மை இல்லையா?

Actress kanigha dubbed 3 heroines: தமிழக பெண்மணிகள் பலராலும் ஈஸ்வரி என அறியப்பட்ட சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் கனிகாவிற்கு திறமைகளோ ஏராளம். “எனக்கு வரும் புதிய வாய்ப்புகளுக்கு நான் எப்போதும் நோ சொன்னது கிடையாது.புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்”என்று கூறும் கனிகா பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ்ந்து வருகிறார்.

2001 மிஸ் சென்னையின் ரன்னர்அப் ஆன கனிகா சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்து திரைத்துறைக்குள் என்டர் ஆனார். எதிர்பாராது கிடைக்கும் வெற்றியானது, வாழ்வை புதிய பரிமாணத்திற்கு இட்டு செல்லும் என்பது போல கனிகாவின் வாழ்க்கையிலும் இந்த வெற்றி ஒரு மேஜிக் செய்தது.

ரன்னர்அப் ஆன கனிகாவின் அட்டை படத்தை பார்த்த சுசி கணேசன் அவருக்கு 5 ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். கல்லூரி கோடை விடுமுறையில் பைவ் ஸ்டார் படத்தை நடித்து கொடுத்த கனிகா, கல்லூரி படிப்பு முடித்த பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியான நடிகையானார்.

Also read: குணசேகரனின் கொட்டத்தை அடக்க ஈஸ்வரி எடுக்க போகும் முடிவு.. யார் கொடுத்த தைரியம் தெரியுமா?

பைவ் ஸ்டார்க்கு பின் மாதவனுடன் எதிரி படத்திலும் அஜித்துடன் வரலாறு படத்திலும் நடித்த கனிகா மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசி ராஜா படத்திலும் மோகன்லால் சுரேஷ்கோபி போன்ற முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிப்பை தவிர பாடகி, சின்னத்திரை தொகுப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டவர் கனிகா. இவரைப் பற்றி பலரும் அறியாத ஒன்று இவர் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட். டப்பிங் பற்றி கேட்டால் ஒரு கிளாஸ் எடுக்கும் அளவுக்கு சொற்பொழிவு ஆற்றி தள்ளி விடுவாராம்.

அன்னியனின் சதா, சிவாஜியில் ஸ்ரேயா, சச்சினில் ஜெனிலியா என பல கதாபாத்திரங்களுக்கு தனது குரலின் மூலம் உயிரோட்டம் கொடுத்திருப்பார். டைரக்டர் சங்கர் தான் இவரின் வாய்ஸை இனம் கண்டுபிடித்து டப்பிங்கில் யூஸ் பண்ண முடிவு பண்ணாராம். அதற்குப் பின் வந்த விளைவு தான் இந்த டப்பிங் என்று மனம் திறக்கிறார் கனிகா. மேலும் சமூக வலைதளங்களில் பாடல் படங்கள் நடனம் என போஸ்ட் போட்டு எப்போதும் தன்னை ஆக்டிவாக வைத்திருக்கிறார்.

Also read: எதிர்நீச்சல் ஈஸ்வரி நடித்த 5 படங்கள்.. அஜித்தை வெறுத்து ஒதுக்கி அவமானப்படுத்திய கனிகா