Ajith : வாரிசை தோற்கடித்த துணிவு, கில்லி கிட்ட வேலைக்கு ஆகல.. தீனா, பில்லா முதல் நாள் வசூல்

நேற்று அஜித் தன்னுடைய 53வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களை அஜித் கைவசம் வைத்துள்ள நிலையில் இந்த படங்களை பற்றிய எந்த அப்டேட்டும் நேற்று வெளியாகவில்லை. ஆனால் அஜித்தின் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

அந்த வகையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பட்டைய கிளப்பிய தீனா படம் வெளியானது. அதேபோல் விஷ்ணுவர்தன், அஜித் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த பில்லா படமும் நேற்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

அஜித் ரசிகர்கள் தியேட்டரையும் சதி கலங்கச் செய்துவிட்டனர். தியேட்டருக்கு வெளியே பட்டாசு வெடித்து பார்த்திருக்கிறோம். ஆனால் ரோகிணி தியேட்டர் உள்ளேயே பட்டாசை கொளுத்தி விட்டனர். அதேபோல் கில்லி படத்தின் போஸ்டரை அஜித் ரசிகர் கிழித்துவிட்டார்.

அஜித்தின் தீனா மற்றும் பில்லா பட முதல் நாள் வசூல்

இதுவும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் முதல் நாளில் தீனா மற்றும் பில்லா என 2 படங்களுமே சேர்த்து வெறும் 1.5 கோடி மட்டும் தான் வசூல் செய்தது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் விஜய்யின் கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இப்போது வரை கில்லி படங்கள் திரையரங்குகளில் வெற்றி படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் நாளில் இந்த படம் 4 கோடியை தாண்டி வசூல் செய்த நிலையில் தற்போது வரை 25 கோடியை நெருங்கி இருக்கிறது. ஆனால் அஜித் படங்களின் ரீ ரிலிஸ் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

கடந்த ஆண்டு வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒன்றாக மோதிக்கொண்டது. அப்போது வாரிசை காதலும் துணிவு படம் தான் நல்ல வரவேற்பை பெற்ற வசூல் சாதனை படைத்தது. ஆனால் கில்லியிடம் அது வேலைக்கு ஆகாமல் போய்விட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்