திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

Vijay & Ajith: வரவேற்பே இல்லாமல் புஸ்ஸுனு போன அஜித் பிறந்தநாள்.. 3 படங்கள் ரிலீஸ் ஆகியும் விஜய்க்கு கிடைத்த வெற்றி

Vijay and Ajith: முன்னணி நடிகர்களாக இருக்கும் ஹீரோக்கள் பலரும் அவர்களுடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடும் விதமாக புதுப்படத்தின் அப்டேட்டுகளை வெளியிடுவார்கள். அதன் மூலம் ரசிகர்களுக்கும் அந்த ஹீரோவுக்கும் இணைப்புறியாத பந்தம் ஏற்பட்ட மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஆனால் அஜித் பொருத்தவரை ரசிகர்களுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று நிரூபித்துக் காட்டும் வகையில் நேற்று அவரின் 53வது பிறந்தநாளை கமுக்கமாக கொண்டாடிவிட்டார். இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்திக்கும்படியாக அமைந்துவிட்டது.

ஆனாலும் இப்பொழுது ரீ ரிலீஸ் கான்செப்ட் ட்ரெண்டிங்கில் இருப்பதால் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் நேற்று பில்லா மற்றும் தீனா படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டது. வெளிநாட்டில் மங்காத்தா படம் வெளியானது. இப்படி மூன்று படங்கள் ரிலீஸ் ஆகிய நிலையிலும் கில்லி அளவிற்கு கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் கிடைக்காமல் போய்விட்டது.

ஆட்ட நாயகனாக நிரூபித்த விஜய்

ரோகிணி தியேட்டரில் தீனா படத்தை பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் வெடி போட்டு விஜய் ரசிகர்களை கடுப்பாக்கினாலும் வெற்றி பெற்றது என்னமோ விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி படம் தான். கில்லி படத்திற்கு முன்னாடி யாருடைய படம் வந்தாலும் வெற்றி பெறாது என்று சொல்லும் அளவிற்கு அஜித்தின் பழைய படங்கள் பெருசாக எடுபடாமல் போய்விட்டது.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது கில்லி படத்தை ரீ ரிலீஸ் பண்ணுவதற்கு முன் சரியான திட்டமிடுதல் மற்றும் பிரமோஷன்கள் போன்ற பல விஷயங்களை பிளான் பண்ணி பண்ணியிருக்கிறார்கள். ஆனால் அஜித் படங்களுக்கு எந்தவித பிளானும் இல்லாமல் வெளியிடப்பட்டது. இதனால் தான் என்னமோ வரவேற்பே இல்லாமல் ஒரே நாளில் புஸ்ன்னு போய்விட்டது. எப்போதுமே ஆட்ட நாயகன், வசூல் மன்னன் நான்தான் என்று விஜய் தொடர்ந்து நிரூபித்துக் காட்டி வருகிறார்.

- Advertisement -spot_img

Trending News