கதையே இல்லாமல் உருட்டும் எதிர்நீச்சல் சீரியல்.. ஹனிமூன் மாதிரி ஜெயிலுக்கு போகும் குணசேகரன்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் ஒரு நேரத்தில் மக்கள் தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பும், விறுவிறுப்பான கதையும் இருந்தது. ஆனால் அது அப்படியே தலைகீழாக மாறிப்போன நிலையில் தடம் புரண்டு விட்டது. அத்துடன் வர வர மாமியார் கழுதை போல ஆனாளம். அதுபோல தான் தற்போது கதையே இல்லாமல் எப்ப பார்த்தாலும் சண்டை சச்சரவு அழுகை போன்ற விஷயத்தை மட்டுமே வைத்து உருட்டிக் கொண்டு வருகிறார்கள்.

இதனால் பார்ப்பதற்கு சளிப்படையும் வகையில் போர் அடித்து விட்டது. அந்த வகையில் பார்க்கிற கொஞ்சநஞ்ச மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கதை வேற கோணத்தில் கொண்டு போனால் நன்றாக இருக்கும். இதில் சாரு பாலாவிற்கு எதிராக தன் மனைவியை நிற்க வைத்து எஸ் கே ஆர் குடும்பத்தை தோற்கடிக்க வேண்டும் என்று குணசேகரன் திட்டம் தீட்டுகிறார்.

இவருக்கு ஏற்ற மாதிரி ஜனனியும் ஈஸ்வரியை வைத்து பிளான் பண்ணி ஜெயிக்க வைத்து குணசேகரன் கண்ணிலே விரலை விட்டு ஆட்ட வேண்டும் என்று நினைக்கிறார். அதுபோலவே வருகிற எலெக்ஷனில் ஈஸ்வரி தான் ஜெயிக்கப் போகிறார். அதன் பின் பதவி கையில் வந்ததும் ஈஸ்வரி சுயமாக சிந்தித்து ஒவ்வொரு வேலையும் செய்து அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு போகப் போகிறார்.

Also read: குணசேகரன் மூஞ்சியில் கரியை பூச போகும் ஈஸ்வரி.. சாருபாலா ஜனனி சேர்ந்து போட்ட பிளான்

இது தெரியாமல் குணசேகரன், ஈஸ்வரி ஜெயித்து விட்டால் நாம் சொல்றபடி தான் எல்லாம் நடக்கும். மொத்த அதிகாரமும் நம் கைக்கு வந்து விடும் என்று தப்பு கணக்கு போட்டு விட்டு ஈஸ்வரியை நிற்க வைத்தார். ஆனால் இதற்கு அப்படியே உல்டாவாக தான் குணசேகரனுக்கு மாறப் போகிறது. அடுத்தபடியாக ஜீவானந்தத்திற்கு எதிராக அப்பத்தாவின் கேசுக்கு சாருபாலா தான் வாதாட போகிறார் என்ற விஷயம் குணசேகருக்கு தெரியாது.

அதே நேரத்தில் அப்பத்தாவின் இறப்பிற்கு ஜீவானந்தம் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்று சாருபாலா கேஸ் பைல் பண்ணி இருக்கிறார். அந்த வகையில் குணசேகரன் ஒரு விதத்தில் காரணமாக இருப்பார் என்று போலீஸிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் போலீசார் குணசேகரன் வீட்டிற்கு வந்து அவரை ஜெயிலுக்கு கூட்டிட்டு போக போகிறார்கள்.

இந்த புது குணசேகரன் வந்ததிலிருந்து ஜெயிலுக்கு போவதும் சண்டை நடப்பதும் அடிக்கடி இருக்கிறது. அதுவும் ஜெயிலுக்கு இவர் என்னமோ ஹனிமூன் போற மாதிரி போயிட்டு அலப்பறை கொடுக்கிறார். இந்த சைடு கேப்பில் தான் அவரு படங்களில் நடிப்பதற்கும் கமிட் ஆகி இருப்பதால் இந்த மாதிரி ஒரு சீனை கொண்டுவந்து அதை நிறைவேற்றிக் கொள்கிறார். ஆக மொத்தத்தில் எதிர்நீச்சல் சீரியல் பழைய மாதிரி இல்லாமல் போய்விட்டது.

Also read: ஈஸ்வரி வேலைக்கு வேட்டுவைத்த குணசேகரன்.. கல்லூரிக்கு போய் வேதம் ஓதிய 4 சாத்தான்கள்