புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

டைட்டில் வின்னர் இவர்தான்.. ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி என விமர்சித்த சீசன் 6 போட்டியாளர்

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் என்டர்டைன்மென்ட் ஷோவானா பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி  60 நாட்களைக் கடந்த நிலையில் அனுதினமும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் போட்டி அடிப்படையில் ஒரு போட்டியாளர் கமல் முன்னிலையில் வெளியற்றப்படுவார்கள்.

கடந்த வாரம் திடீரென்று ராம் மற்றும் ஆயிஷா இருவரையும் டபுள் எவிக்ஷன் செய்து வெளியேற்றினார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்கள் அளிக்கும் பேட்டியின் மூலம் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகும்.

Also Read: இந்த வாரம் உறுதியாக வெளியே செல்லப் போகும்.. காட்டுத் தீயாக பரவும் ஓட்டிங் லிஸ்ட்

அந்த வகையில் சீரியல் நடிகை ஆயிஷா தற்போது அளித்திருக்கும் பேட்டியில் விஜய் டிவியை நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து புட்டு புட்டு வைத்திருக்கிறார். இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 6-வது சீசனின் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட்டு அல்ல. ஆனால் அந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்கள் அனைத்தும் ஸ்கிரிப்ட் தான்.

முன்கூட்டியே எந்தெந்த போட்டியில் யார் யார் வெற்றி பெற வேண்டும். யார் யார் எந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பதை சொல்லிவிட்டு தான் விளையாட்டை துவங்குகிறார்கள் என்று தற்போது ஆயிஷா விஜய் டிவியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விட்டார். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் ஷிவின் மட்டுமே சிறப்பாக விளையாடுகிறார்.

Also Read: 10 வாரமும் நாமினேஷன் லிஸ்டில் வராத போட்டியாளர்.. பிக் பாஸ் வரலாற்றிலேயே சாதனை படைத்த அதிர்ஷ்டசாலி

அவர்தான் இந்த சீசனின் வெற்றியாளராகவும் இருக்கப் போகிறார் என்று இப்பவே டைட்டில் வின்னர் யார் என்பதையும் ஆயிஷா உடைத்து கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல கதை சொல்லும் டாஸ்கில் என்னுடைய கதையைப் பற்றி ரசிகர்களுக்கு சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் சோஷியல் மீடியாவில் என்னைப் பற்றி கதைகள் நிறையவே வெளியாகியிருக்கிறது.

ஆகையால் மறுபடியும் அதைப்பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்து ரசிகர்களை சலிப்படைய செய்ய வேண்டாம் என்று நினைத்து விட்டதாகவும் ஆயிஷா வெளிப்படையாக பேசியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும்போது ஆர்வத்துடனும் புத்துணர்ச்சியுடன் இருந்த ஆயிஷாவின் மீது சின்னத்திரை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

Also Read: சக நடிகையை படு கேவலமாக திட்டிய அசீம்.. ஒரிஜினல் முகத்தைப் பார்த்து அரண்டு போன சூட்டிங் ஸ்பாட்

ஆனால் அவற்றை எல்லாம் பூர்த்தி செய்ய முடியாமல், ரசிகர்களை ஏமாற்றி போட்டியாளர்களாகவே பார்க்கப்படுகிறார். இவர் பிக் பாஸ் வீட்டில் நடப்பதை பற்றி வெளிப்படையாக பேசியதுடன் விஜய் டிவியின் பிளானையும் உடைத்துக் கூறியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.

- Advertisement -

Trending News