திடீரென ட்ரெண்டாகும் மஞ்சும்மல் பாக்ஸ்.. காரணம் இதுதான்

manjummel-boys
manjummel-boys

சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியானது தான் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாள சினிமாவில் வெளியான இந்தப் படத்திற்கு எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

இந்த படத்தில் ஸ்ரீநாத் பாசி, ஷாகீர் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கொடைக்கானலில் சுற்றுலாவுக்காக நண்பர்கள் செல்லும்போது எதிர்பாராத விதமாக குணா குகையில் ஒருவர் மாட்டிக் கொள்ள அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்தனர். மோலிவுட்டில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் மஞ்சும்மல் பாய்ஸ் பெற்றது.

டிஸ்னியில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ்

இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இரண்டு மாதங்கள் கழித்து இப்போது டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. மீண்டும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த படத்தில் இடம்பெற்ற சுவாரசியமான காட்சிகளை வீடியோக்களாக ட்விட்டரில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் மஞ்சும்மல் பாய்ஸ் என்ற ஹேர் டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது.

மலையாள சினிமாவில் வெளியான இந்த படத்திற்கு இப்படி ஒரு வரவேற்ப்பை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். அதோடு இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு எக்கச்சக்கமானோர் குணா குகையை பார்க்க அதிகம் படையெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement Amazon Prime Banner