TRP Rating: குணசேகரனின் தோல்வி சன் டிவிக்கு கிடைத்த வெற்றி.. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த டாப் 6 சீரியல்கள்

TRP ratings this week: குடும்பங்களில் இருக்கும் ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் தினமும் நேரத்தை செலவழிக்கும் ஒரு பொக்கிஷமான விஷயம் தான் சீரியல். அந்த வகையில் சில சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது நாடகங்களை ஒளிபரப்பு செய்கிறார்கள். இருந்தாலும் எப்பொழுதுமே மக்கள் மனதில் சிம்ம சொப்பனமாக இருப்பது சன் டிவி சீரியல்தான்.

இதற்கு அடுத்தபடியாக விஜய் டிவி சீரியல்களும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் எந்த சீரியல் மக்களை அதிகமாக கவர்ந்து இருக்கிறது என்பதை டிஆர்பி ரேட்டிங் மூலம் கணிக்க முடியும். அப்படி இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஆறு இடத்தை பிடித்த சீரியல்களைப் பற்றி பார்க்கலாம்.

மதியம் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் இந்த ஒரு சீரியல்தான் தொடர்ந்து ஆறாவது இடத்தில் இருக்கிறது. அந்த வகையில் 6.98 புள்ளிகளை பெற்று இனியா சீரியல் மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. விக்ரமின் பரம எதிரியான தீனதயாளின் உண்மையான சுயரூபத்தை இனியா வீடியோ மூலம் காட்டி அவருடைய வேலையை அபகரித்து விட்டார்.

டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்பட்ட மாற்றம்

இனி விக்ரம் மற்றும் இனியாவுக்கு நல்ல காலம் தான் என்று சொல்லும் அளவிற்கு சந்தோஷத்தில் இருந்து வருகிறார்கள். ஆனால் உண்மையான எதிரி விக்ரமின் தோழி என்பது தெரியாத வகையில் கதை சுவாரசியமாக நகர்ந்து கொண்டு வருகிறது.

இதற்கு அடுத்ததாக அண்ணன் தங்கையின் பாசத்தை வைத்து கடந்த பல மாதங்களாக இழுத்தடித்துக் கொண்டு வரும் வானத்தைப்போல சீரியல் 7.45 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதில் சின்ராசு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பொழுது பொன்னி கோவிலில் நேர்த்திக்கடன் பண்ணி கணவரை காப்பாற்ற போராடி வருகிறார்.

அதே நேரத்தில் நான் இருக்கும் வரை அண்ணனுக்கு எதுவும் ஆக விடமாட்டேன் என்று துளசி இன்னொரு பக்கம் போராடுகிறார். ஆனாலும் இப்பொழுது வரை பொன்னி, துளசியை எதிரியாக நினைத்து சின்ராசு பக்கத்தில் நெருங்க விடாமல் சதி செய்து வருகிறார்.

அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாடகத்தில் இந்த ஒரு நாடகம் தான் நன்றாக இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு சிறகடிக்கும் ஆசை சீரியல் 7.84 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால் தற்போது இந்த நாடகத்தின் ஆட்டநாயகனாக இருக்கும் முத்துவுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளை காட்டி அதே பார்த்து குளிர்காயும் அளவிற்கு ரோகினியின் நிலைமை அமைந்து வருகிறது. இதை எப்படி முத்துவும் மீனாவும் சரி செய்யப் போகிறார் என்பது மீதமுள்ள கதையாக நகரும்.

இதற்கு அடுத்ததாக ஒரு காலத்தில் டிஆர்பியில் கிங்காக ஜொலித்துக் கொண்டிருந்த குணசேகரன் நாடகமான எதிர்நீச்சல் சீரியல் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் சமீப காலமாக சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் கடந்த எபிசோடில் முதல்முறையாக குணசேகரனை தோற்கடித்து பெண்கள் ஜெயித்தது போல் காட்டினார்கள். அதனால் தற்போது சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் ஒரு படி முன்னேறி 8.61 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டது.

அடுத்ததாக குடும்பத்திற்காக அனைத்து பாரங்களையும் தலையில் தூக்கி வைத்து குடும்ப பெண்மணியாக கயல் ஒவ்வொரு பிரச்சனையையும் சரி செய்து வருகிறார். அந்த வகையில் தம்பி தங்கை என்று இருந்த கயல் தற்போது எழிலை காதலித்து கல்யாணம் பண்ணுவதற்கு முடிவெடுத்துவிட்டார்.

ஆனால் இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு பல வழிகளில் இருந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. இதை எப்படி சரி செய்து எழில் கயல் திருமணம் நடக்க போகிறது என்பதை பார்க்க மக்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் 8.79 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

முதலிடத்தில் வழக்கம் போல சிங்க பெண்ணே சீரியல் கொடிகட்டி பறந்து வருகிறது. 9.44 புள்ளிகளைப் பெற்று அதிகமான மக்களை கவர்ந்திருக்கிறது. தற்போது அன்புக்கு அடிப்பட்டிருக்கிறது என்று தெரிந்த ஆனந்தி அன்பை பார்க்க முடியாமல் ஒவ்வொரு நாளும் தவித்து வருகிறார். இதை தெரிந்து கொண்ட மகேஷ், ஆனந்தியின் கவலையை போக்கும் விதமாக அன்புவை பார்ப்பதற்கு வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். ஆனால் கடைசியில் இதில் யாருடைய காதல் நிறைவேற போகிறது என்பதுதான் இப்பொழுது வரை கேள்விக்குறியாக இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்