இந்த வாரம் உறுதியாக வெளியே செல்லப் போகும்.. காட்டுத் தீயாக பரவும் ஓட்டிங் லிஸ்ட்

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் என்டர்டைன்மென்ட் ஷோவானா பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளதால், சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் விஜய் டிவியில் தினம் தோறும் ஒளிபரப்பாகிறது. இதில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் 6 பேரில் யார் வெளியேற்றப்படுவார் என்பதை உறுதி செய்யும் ஓட்டிங் லிஸ்ட் இணையத்தில் தற்போது காட்டுத் தீயாக பரவுகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் திடீரென்று ராம் மற்றும் ஆயிஷா இருவரையும் டபுள் எவிக்ஷன் செய்து வெளியேற்றினார்கள். ஆகையால் இந்த வாரத்திற்கான எவிக்சன் குறித்த பதட்டம் போட்டியாளர்களிடம் நிலவிவரும் நிலையில், நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஜனனி, ஏடிகே, மணிகண்டன், அசீம், விக்ரமன், ரக்ஷிதா உள்ளிட்டோருக்கு மக்கள் இந்த வாரம் முழுவதும் ஓட்டுக்களை வழங்கினார்கள்.

Also Read: பிக்பாஸ் ஓட்டில் நடந்த குளறுபடி.. அநியாயமாக வெளியேறும் போட்டியாளர்

இதில் நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து இப்போது வரை பிக் பாஸ் வீட்டின் கலவரங்களுக்கு காரணமாக இருக்கும் அசீம், இந்த சீசனின் கண்டன்ட் கொடுக்கும் நபராக இருக்கிறார். ஆகையால் இவருக்கும் ரசிகர்கள் நல்ல சப்போர்ட் கொடுத்து, ஓட்டுக்களையும் வாரி வழங்கி உள்ளனர். ஆகையால் இந்த 6 பேரில் அசீமுக்கு தான் அதிக ஓட்டுகள் கிடைத்து முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த சீசனில் ஓரளவு நியாயம் பேசக்கூடிய நபராக இருக்கும் விக்ரமனுக்கு 2-ம் இடமும், செம க்யூட்டான போட்டியாளராக வல ம் வரும் ஜனனி ஓட்டுக்களின் அடிப்படையில் 3-ம் இடமும் சீசன் 6-ன் கவர்ச்சி நாயகியான சீரியல் நடிகை ரக்ஷிதாவிற்கு 4-ம் இடமும் கிடைத்துள்ளது.

Also Read: 2022 ஆம் ஆண்டின் டாப் 10 சீரியல்கள்.. இந்த ஆண்டு முழுவதும் டஃப் கொடுத்த ஒரே சீரியல்

கடைசி இரண்டு இடம் ஏடிகே மற்றும் மணிகண்டன் இருவரும் பெற்றுள்ளனர். இவர்களது ஓட்டு வித்தியாசம் மிக குறைவு தான். இருப்பினும் கடந்த வாரம் கமல் மணிகண்டனை வார்னிங் செய்தும் அவர் கேட்காமல் இப்போதும் மைனா நந்தினிவுடன் சில விஷயங்களில் ஒரு தலைப்பட்சமாக சப்போர்ட் செய்து வருகிறார்.

இது போட்டியாளர்கள் சிலரை பாதிக்கும் என்றும் ஆண்டவர் கடந்த எபிசோடில் குறிப்பிட்டும், அவர் அந்த குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இப்படித்தான் கடந்த சீசனில் பிரியங்காவும் செய்து கொண்டிருந்தார். ஆகையால் தான் அவருக்கு கிடைக்க வேண்டிய முதலாம் இடம் கைநழுவி சென்று 2ம் இடம் கிடைத்தது.

Also Read: பத்தினி வேஷம் போடும் பிக்பாஸ் நடிகை.. பப்ளிசிட்டிக்காக போடும் தந்திரம்

இப்போது அதே நிலைமை தான் மணிகண்டனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் பிரியங்காவை விட மோசமான நிலை ஏற்பட்டு, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார். ஒருவேளை மைனா நந்தினி இந்த வார தலைவராக இல்லாமல் எபிக்ஷன் ப்ராசஸில் இருந்திருந்தால், அவரையும் பிக் பாஸ் ரசிகர்கள் வச்சு செஞ்சு இருப்பார்கள். ஆனால் தப்பித்துக் கொண்ட மைனா நந்தினியால் தற்போது மணிகண்டன் மாட்டிக்கொண்டு குறைந்து ஓட்டுக்களின் அடிப்படையில் எலிமினேட் ஆகப்போகிறார்.

 பிக் பாஸ் சீசன் 6 இந்த வார ஓட்டிங் லிஸ்ட்

bb6-voting-list-cinemapettai
bb6-voting-list-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்