மாரி செல்வராஜுக்காக துருவ் விக்ரமின் புது அவதாரம்.. டைட்டிலுடன் வெளியான போஸ்டர்

Dhuruv Vikram: வாரிசு நடிகர் என்ற அடையாளத்தோடு நடிக்க வந்த துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இதுவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதை நிரூபிக்கும் வகையில் தற்போது வெளியாகி இருக்கும் போஸ்டர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதில் துருவ் விக்ரமின் தோற்றம் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? எனவும் கேட்க வைத்துள்ளது.

மிரட்டும் பைசன் போஸ்டர்

dhruv vikram
dhruv vikram

அதன்படி பா ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்பாலஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு பைசன் என பெயரிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் காட்டெருமை என்று பொருள்.

அந்த போஸ்டரில் பெரிய காளை மாட்டின் தலை பிரம்மாண்டமாக இடம்பெற்றுள்ளது. அதன் கீழே துருவ் விக்ரம் சட்டை அணியாமல் மல்யுத்த வீரர் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.

அதை பார்க்கும் போதே நிச்சயம் இப்படத்திற்காக அவர் கடுமையான ஒர்க்கவுட் செய்திருப்பார் என்று தெரிகிறது. இப்படி வெளியாகி உள்ள இந்த போஸ்டருக்கு இப்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்