சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

ஈஸ்வரியை வைத்து டீல் பேசும் குணசேகரன்.. கம்பெனி எனக்கு பொண்டாட்டி உனக்கு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பையும் தாண்டி சுவாரஸ்யமான விஷயங்கள் வருகிறது. அந்த வகையில் இத்தனை நாளாக ஈஸ்வரி, ஜீவானந்தத்தின் எக்ஸ் காதலி என்று யூகித்த நிலையில் அதை ஊர்ஜிதம் படுத்தும் வகையில் தற்போது இவர்கள் இருவரும் சந்தித்து, கல்லூரி பருவத்தில் சொல்லாமலும் பேசாமலும் தோற்றுப் போன காதலைப் பற்றி பேசி அனைவரையும் ஈர்த்து விட்டார்கள்.

அந்த வகையில் ஈஸ்வரிக்கு உண்மையான வில்லன் குணசேகரன் இல்ல இவருடைய அப்பா தான் என்று நன்றாக தெரிகிறது. அதனால் தான் 15 வயதுக்கு மூத்தவருக்கு பணம் வசதி இருக்கு என்ற அடிப்படையில் ஈஸ்வரியை கட்டிக் கொடுத்து வாழ்க்கையை கெடுத்து விட்டார். இவர்களுடைய பிளாஷ்பேக் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வந்து இருந்தாலும் அனைவரும் மனதிலும் நல்ல ஸ்ட்ராங்காகவே ஒட்டிக்கொண்டது.

Also read: ஆணவத்தில் ஆடின குணசேகரனை தும்சம் செய்த ஜீவானந்தம்.. ஜனனி ஷாக், கௌதம் என்டரி வேற லெவல்

அந்த அளவிற்கு ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தம் கண்களாலே பேசிக்கொண்டு அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி எதார்த்தமான நடிப்பை காட்டி இருக்கிறார்கள். இவர்களுடைய விஷயம் மட்டும் குணசேகரனுக்கு தெரிந்தால் இனி பக்கவாதம் போல் நடிக்க தேவையே இல்லை உண்மையிலே இவருக்கு பக்கவாதமே வந்துவிடும்.

ஒருவேளை தெரிந்தால் ஈஸ்வரியை வைத்து சொத்து விஷயத்தை ஜீவானந்தத்திடம் டீல் பேசக்கூட வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் குணசேகரனுக்கு சொத்துக்கு அப்புறம் தான் மற்ற எல்லா விஷயங்களும் கண்ணுக்கு தென்படும். அந்த வகையில் என் பொண்டாட்டிய நீ வச்சுக்கோ, 40% சொத்தை என்னிடம் கொடுத்துவிடு என்று கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

Also read: பகல் கனவு காணும் ஜனனி.. கரிகாலனிடம் இருக்கும் மூளையில் பாதி கூட குணசேகரனிடம் இல்ல

அடுத்தபடியாக இதுவரை ஜனனி சக்தி இருந்த வீட்டை காட்ட மாட்டார்களா என்று நினைத்திருக்கும் போது வீட்டை காட்டி அதில் ரேணுகா நந்தினி அனைவரும் பேசுகிறார்கள். அப்பொழுது கதிர் காட்டான் மாதிரி கத்திக்கொண்டு நந்தினியை தேடி அலைகிறார். இதில் ஒன்று மட்டும் புரிகிறது அந்த வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு, இவர்களுடைய பொண்டாட்டிகள் இல்லை என்றால் எந்த வேலையும் ஓடாது என்று தெரிகிறது.

அடுத்து நந்தினி வழக்கம்போல் அவருடைய நக்கலான பேச்சை கதிரிடம் காட்டி எந்த அளவுக்கு கழுவி கழுவி ஊத்த முடியுமோ அதை தரமாக செய்து விட்டார். ஆனாலும் தற்போது கதிரால் ஒன்னும் பண்ண முடியாததால் அனைத்தையும் துடைத்துவிட்டு சும்மா சுத்திகிட்டு இருக்காரு. இதற்கு அடுத்து ஜீவானந்தம் ஈஸ்வரி காதல் விவாகரம் எந்த அளவுக்கு பூகம்பமாக வெடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: குணசேகரனுக்கு சரியான ஆப்பை வைத்த ஜீவானந்தம்.. அம்மாடி ஜனனி இதுல நீ என்ன பண்ண போற?

- Advertisement -

Trending News