திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பகல் கனவு காணும் ஜனனி.. கரிகாலனிடம் இருக்கும் மூளையில் பாதி கூட குணசேகரனிடம் இல்ல

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது குணசேகரனின் நிலைமை டம்மியாக வாயாலேயே வடை சுட்டுகிட்டு இருக்காரு. இவர் வீட்டிலேயே புகுந்து அப்பத்தாவின் கைரேகையை எடுத்து சொத்தையே ஆட்டைய போட்டது மட்டுமல்லாமல், குணசேகரனை அசிங்கப்படுத்தி தரமான சம்பவத்தை செய்துவிட்டார் ஜீவானந்தம்.

இதற்குப் பிறகு அடிபட்ட பாம்பாக படை எடுக்க துடித்து கொண்டு இருக்கிறார். இவரால் ஒன்னும் பண்ண முடியாது, அடியால் வைத்து ஜீவானந்தத்தை காலி பண்ண வேண்டும் என்று குறுக்கு புத்தியில் வேலையை பார்த்து வருகிறார். அதற்கு பக்கவாதம் வந்தது போல் குடும்பத்தில் அனைவரிடம் டிராமா போட்டு ஏமாற்றி வருகிறார்.

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

இவர் பண்ணிய அட்டூழியங்கள் போதாதுன்னு இன்னும் பல விஷயங்களை முட்டாள்தனமாகவே யோசித்து ஏமாற இருக்கிறார். எல்லாருடைய கண்ணுக்கு வேணா கரிகாலன் முட்டாளாக தெரியலாம், ஆனால் அந்த வீட்டில் இருப்பவர்களிலேயே இவர்தான் புத்திசாலி. இவர்கிட்ட இருக்கிற மூளையில் பாதி அளவுக்கு கூட குணசேகரனிடம் இல்ல.

எல்லா விஷயத்தையும் கரெக்டாக ஆராய்ந்து எந்த நேரத்தில் எதை சொல்ல வேண்டும் என்று சரியாக செய்து வருகிறார் கரிகாலன். அந்த வகையில் மங்குனி ஆடிட்டரை வைத்துக்கொண்டு குணசேகரன் தொடர்ந்து தோல்வியை அடைந்து வருகிறார். தற்போது ஆடிட்டருக்கு அல்லகையாக இன்னொருவர் வந்திருக்கிறார். இவர் கூறுவது ஜீவானந்தம் 40% சொத்தை ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணினதை தப்பு என்று நிரூபிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

Also read: நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் எதிர்நீச்சல் குணசேகரன்.. அடேங்கப்பா ஆணாதிக்கத்திற்கு ஜாஸ்தி தான்

அதற்கு குணசேகரன் அது எப்படி முடியும் என்று அதற்கான வழியை கூறுங்கள் என்று கேட்கிறார். இந்த நேரத்தில் கரிகாலன் அவருக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டாரா என்று டைமிங் இல் சரியாக பேசுகிறார். அதாவது ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணது தப்பு என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் அதை ஆதாரத்துடன் நிரூபித்து காட்டினாலும் ஒன்னும் பண்ண முடியாது என்றுதான் ஜனனி அமைதியாக இருக்கிறார்.

இதுல இந்த புதுசா வந்த ஆடிட்டர் எதையோ பண்ண போகிறேன் என்று புரளியை கிளப்புகிறார். அடுத்ததாக சக்தி எப்படியும் ஜீவானந்தத்தை பற்றி விசாரித்து நல்ல தகவலை கொடுப்பார். அதன்பின் அவரிடம் நேரடியாக நான் பேசப் போகிறேன் என்று ஜனனி பகல் கனவு கண்டு வருகிறார். ஆக மொத்தத்தில் இவர்கள் அனைவரும் வாயாலயே வடையை மட்டும் தான் சுட முடியும்.

Also read: மீனாட்சி கிட்டயே டக்கால்டி வேலையை காட்டுற குணசேகரன்.. ஜீவானந்தத்தின் கேரக்டரை சொதப்பிய எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News