சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

குணசேகரனுக்கு சரியான ஆப்பை வைத்த ஜீவானந்தம்.. அம்மாடி ஜனனி இதுல நீ என்ன பண்ண போற?

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனிடம் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் இத்தனை நாட்களாக அடிமை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது அவர்கள் அனைவரும் துணிச்சலாக பேசுவது மட்டுமில்லாமல் இவர்களுடைய குழந்தைகளும் குணசேகரனை எதிர்த்து பேசி சுதந்திரமாக வாழ போராடுகிறார்கள்.

ஆனால் இது ஒரு பக்கம் நல்ல விஷயமாக இருந்தாலும், தினமும் அந்த குழந்தைகளை வைத்து கதையை உருட்டுவது பார்ப்பதற்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் ஐஸ்வர்யா, தர்ஷினி, தாரா இவர்கள் பேச்செல்லாம் ரொம்பவே வயசுக்கு மீறிய பேச்சாக கொண்டு போகிறார்கள். இவர்களை வச்சு கதையை நகர்த்துவதை தவிர்த்து விட்டு அடுத்தடுத்து சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

Also read: மொத்தமாக குணசேகரனுக்கு சமாதி கட்டும் குடும்பம்.. நாளுக்கு நாள் கொஞ்சம் ஓவராக தான் போகுது

அடுத்தபடியாக இத்தனை நாளாக அப்பத்தாவின் சொத்துக்காக வாயை மூடிக்கொண்டு இருந்த குணசேகரனுக்கு தற்போது இந்த சொத்துக்கள் அனைத்தும் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது என்ற விஷயங்கள் தெரிய வருகிறது. குணசேகரனின் சொத்துக்கு மொத்தமாக ஜீவானந்தம் பெரிய ஆப்பை வைத்து விட்டார். ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வரப் போகிறது.

இதுல வேற ஜனனி என்ன பண்ண போறான்னு தெரியலை, ஆனா பேச்சுக்கு மட்டும் எந்தவித குறைச்சலும் இல்லாமல் இனிமேலும் நான் அந்த குணசேகரனை சும்மா விடமாட்டேன் என்று வீர வசனம் பேசி வருகிறார். தற்போது வந்த எபிசோடில் ஜனனி மற்றும் சக்தி ஒரு பொம்மையாகத் தான் அந்த வீட்டில் இருந்து வருகிறார்கள்.

Also read: கோபியின் முகத்திரை கிழிய போகுது.. பாக்கியாவை துரத்த பக்கா பிளான் போட்ட ராதிகா

ஏன் இப்பொழுது பேசிக் கொண்டு வரும் குழந்தைகள் அளவிற்கு கூட இவர்களுடைய பெர்ஃபாமன்ஸ் இல்லாமல் டம்மியாக தான் இருக்கிறது. அதனால் தான் கைரேகை யார் எடுத்தார்கள் என்று கூட கண்டுபிடிக்க முடியாமல் குணசேகரனை மட்டுமே சுற்றி வருகிறார்கள். அப்படியே கைரேகையை ஜீவானந்தம் தான் எடுத்து இருக்கிறார் என்ற விஷயம் தெரிந்தால் அப்படி என்னத்த பண்ணப் போகிறார்கள். ஒருவேளை இதற்காக மறுபடியும் கௌதமிடம் தான் உதவி கேட்பாரோ?

ஆனால் மற்ற சீரியல் மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான கதையாக இருந்தாலும், அரைச்ச மாவை அரைத்து சுவாரஸ்யத்தை போக போக குறைத்து கொண்டே வருகிறார்கள். இயக்குனருக்கு கிடைத்த புகழால் அடுத்து என்ன பண்ண வேண்டும் என்று தெரியாமல் கொஞ்சம் கதையே திசை திருப்பி வருகிறார். இனியாவது இந்த ஜீவானந்தம் கேரக்டருக்கும் ஜனனிக்கும் என்ன முக்கியத்துவம் என்பதை கொண்டு வந்தால் விறுவிறுப்பாக இருக்கும்.

Also read: அழுகாட்சியாக உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. விரைவில் போட உள்ள எண்டு கார்டு

- Advertisement -

Trending News