ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

தனியே கூப்பிட்டு மந்திரிச்சு விட்ட ராதிகா.. வீட்டை விட்டு வெளியேறும் கோபி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்னிலையில் கடந்த வாரம் முழுவதும் கோபி-ராதிகா லீலைகளை காட்டாமல் பாக்கியலட்சுமி புரட்சி பெண்ணாக மாற்றும் அளவுக்கு சமுதாயத்தில் நிலவும் வித்தியாசமான பிரச்சனையை பாக்கியலட்சுமி சீரியல் கையில் எடுத்தது அதனால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது.

இருப்பினும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மீண்டும் ராதிகா மற்றும் கோபியின் காதல் ட்ராக் துவங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ராதிகா வீட்டிற்குச் சென்ற கோபியை அவருடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற ராதிகா நாசூக்காக பேசுகிறார்.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால் இரண்டாவது திருமணம் பாதுகாப்பான வாழ்க்கையை தர வேண்டுமென்று ராதிகாவின் அம்மா ஆசைப்படுவதாக, கோபியிடம் ராதிகா புலம்புகிறார். அத்துடன் கோபியை இன்னும் நம்ப பயமாக இருக்கிறது என்றும் ராதிகா கோபியிடம் ஒரு கொக்கியை போடுகிறார்.

இதனால் ஆவேசப்படும் கோபி, என்னுடைய குடும்பத்தை விட்டுப் பிரிந்து வீட்டை விட்டு வெளியேற தயார் என்று ராதிகாவிடம் வாக்குறுதி கொடுக்கிறார். அத்துடன் என்னுடைய குடும்பத்தையும் மனைவியை விட்டு விவாகரத்து செய்ய தயாராகவுள்ளதாகவும், முறைப்படி ராதிகாவை திருமணம் செய்யப்போவதாகவும் அதிரடி முடிவை எடுத்துவிட்டார்.

ஏற்கனவே கோபியின் அப்பா கோபியிடம், ராதிகாவை சந்தித்து பேசக்கூடாது பழகக் கூடாது என கண்டித்த பிறகும் கோபி அதை எல்லாம் காது கொடுத்து கேட்காமல் மீண்டும் மீண்டும் ராதிகாவை சந்தித்து அவருடைய உறவை தொடர முயற்சிக்கிறார்.

தற்போது ராதிகாவின் சந்தித்து கோபி பேசுவதெல்லாம் கோபியின் அப்பாவிற்கு தெரிந்தால், வீட்டில் நிச்சயம் பிரச்சனையாகும். அத்துடன் கோபிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கும் விஷயம் கோபியின் அப்பாவை தவிர எழிலுக்கு தெரியும் என்பதால் அவர்கள் இருவரும் சேர்ந்து பாக்யாவிடம், இதை சமயம் பார்த்து சொல்லி ஏதாவது ஒரு முடிவு எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News