Connect with us
Cinemapettai

Cinemapettai

baakiya-gopi-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

23 வயசுல உடம்பு பசியில பெத்துக்கிட்டேன்.. இதெல்லாம் ஒரு விளக்கமா கோபி?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் இத்தொடரில் கோபி கதாபாத்திரத்திற்கு சாபம் விடாத ஆளே இல்லை என்று சொல்லலாம். அதாவது கோபி தன்னுடைய தந்தையின் வற்புறுத்தலால் பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.

அதன்பின்பு இவர்களுக்கு செழியன், எழில், இனியா மூன்று குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கோபியின் முதல் பையன் செழியனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் தற்போது கோபியில் கல்லூரி காதலியான ராதிகாவை பார்த்தவுடன் மீண்டும் அவருடன் பழகி வருகிறார்.

இதனால் ரசிகர்கள் பலரும் இவரை திட்டிதீர்த்து வருகின்றனர். இந்நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ். இவர் பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் உரையாடி வரும் சதீஷ் ரசிகர்களின் நெகட்டிவ் கமெண்ட்களால் சிலகாலம் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் உரையாடி வருகிறார். அப்போது பாக்கியாவை பிடிக்காத நீங்கள் எப்படி 3 குழந்தைகள் பெற்றீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு சதீஷ், கோபியாக இருந்த பதில் கூறியுள்ளார். எனக்கு திருமணம் ஆகும்போது 23 வயது.

அந்த வயதில் ஒரு ஆணுக்கு உடல்பசி என்பது இருக்கும். அதனால் தான் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொண்டேன். அதன் பிறகு கிட்டத்தட்ட 25 வருடம் கழித்து ராதிகாவை பார்த்தவுடன் மனதில் ஆழமாக பதிந்திருந்த காதல் வெளியே வந்தது என கோபி கூறியுள்ளார்.

இவ்வாறு கோபி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதெல்லாம் ஒரு விளக்கமாக கோபி என ரசிகர்கள் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும் இந்த வயதில் உங்களுக்கு ராதிகா தேவையா எனவும் பலர் கமெண்டு செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top