அரசியல்வாதிகளை குறிவைத்து வெளிவந்த 5 படங்கள்.. தியேட்டரை விட்டு தெறித்து ஓடிய ரசிகர்கள்

சில திரைப்படங்கள் ஆரம்பிக்கப்படும் போதே ரசிகர்களுக்கு படத்தை எப்போது பார்ப்போம் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடும். இதனால் படத்துக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவிற்கு ஒரு நம்பிக்கை இருக்கும்.

ஆனால் படம் வெளியான பிறகு பார்த்தால் அது தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை கொடுக்கும். இப்படி சினிமாவில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதுபோன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு அரசியலை மையமாக கொண்டு எடுத்த திரைப்படங்கள் தோல்வியில் முடிந்திருக்கிறது. அந்த படங்களை பற்றி காண்போம்.

என் ஜி கே: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் என் ஜி கே. பொதுவாக செல்வராகவன் திரைப்படம் என்றாலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

அதிலும் அரசியல் களத்தை மையப்படுத்தி சூர்யாவின் நடிப்பில் இந்த படம் வெளியாகிறது என்று தெரிந்ததும் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் படம் வெளியாகி ரசிகர்களை கவர தவறியது. மொத்தத்தில் இந்தப் படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.

துக்ளக் தர்பார்: விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் துக்ளக் தர்பார். அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு ஏதோ ஒன்று ரசிகர்களை கவர தவறி விட்டது அதனால் இந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு தோல்வி திரைப்படமாக அமைந்துவிட்டது.

தலைவி: ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி நடித்து வெளியான திரைப்படம் தலைவி. இப்படம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பற்றி எடுக்கப்பட்டிருந்தது. மிகவும் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் படம் வெளியாகி தோல்வியை சந்தித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

எல் கே ஜி: ஆர் ஜே பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் படப்பிடிப்பின் போதே ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்காக பல ப்ரமோஷன்களும் செய்யப்பட்டது. ஆனாலும் இந்தத் திரைப்படம் வெளியாகி தோல்வியில் முடிந்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

நோட்டா: தெலுங்கில் பிரபல ஹீரோவாக இருக்கும் விஜய் தேவரகொண்டாவின் அறிமுக தமிழ் திரைப்படம் தான் இந்த நோட்டா. அரசியல் திரில்லர் திரைப்படமாக உருவான இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்