புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

டிராக்க மாத்துங்கடா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலால் கடுப்பான ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸில் தொடர்ந்து கண்ணன் கதாபாத்திரம் படும் பாடு ரசிகர்களால் பார்க்கவே முடியவில்லை. கண்ணன் தனது தாய் இறந்ததற்காக மொட்டை அடித்து விட்டு, இறுதி சடங்குகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து நிற்கிறான். கண்ணனும் அவனது மனைவியும் வாசலிலேயே நிற்கின்றனர்.

அவர்களை உள்ளே வரும்படி அந்த குடும்பத்தினர் யாருமே அழைக்கவில்லை, அந்த காட்சியில் இருந்தே ரசிகர்களின் ரியாக்சன் மாற தொடங்குகிறது. கண்ணனை அந்த ஊர்க்காரர் தான் உள்ளே அழைத்து வந்து சாப்பிடச் சொல்கிறார். கண்ணன் அமர்ந்ததும் அண்ணன் மூர்த்தி சட்டென்று எழுந்து விடுகிறார். ‘அண்ணே நீங்க சாப்பிடுங்க, நான் போறேன்’ என்று அண்ணனுக்காக வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான் கண்ணன்.

தனது இரு தம்பிகளையும் அழைத்து பேசிய மூர்த்தி, கண்ணனை ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தாலே அவன் செய்த காரியம், கண்ணை மறைத்து விடுகிறது என்று கண் கலங்குகிறார். நீங்களாவது என்னை விட்டுப் பிரியாமல் என்னுடனே இருங்கள் என்று தனது தம்பிகளிடம் கேட்டுக் கொள்கிறார் மூர்த்தி.

கண்ணன் கதாபாத்திரம் செய்த தவறினை மன்னிக்காமல் தொடர்ந்து அந்த குடும்பம் கண்ணனை மறுத்து வருவது பார்வையாளர்களையே சற்று கடுப்பேற்றி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குனரே ‘டிராக்க மாத்துங்கடா’ என்று வலியுறுத்தி வருகின்றனர் ரசிகர்கள்.

kannan-ps-cinemapettai
kannan-ps-cinemapettai

தொடர்ந்து கண்ணன் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிக்கே கிடைத்த பெருமை. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களை காட்டிலும், ஒரு குடும்பத்திற்குள் ஏற்படக்கூடிய கருத்து வேறுபாட்டினை வெளிப்படையாக படம்பிடித்து மக்களுக்கு காட்டுவதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இத்தகைய சீரியல் அண்ணன் தம்பி பிரிவை பார்க்க முடியாமல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கின்றனர். எனவே கண்ணனை அவருடைய அண்ணன்கள் வீட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

Trending News