எதற்கும் துணிந்தவன் படத்தில் வில்லனாக நடிக்கயிருந்த பிக்பாஸ் நடிகர்.. நான் ரொம்ப பிசி

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருண் மோகன், வினய் ராய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. இப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

பிக் பாஸ் சீசன் 1 இல் பங்கு பெற்று மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகர் ஆரவ். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தையும் பெற்றார். இவர் மாடலிங் துறையில் இருந்து வந்து ஏராளமான தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆரவ் தற்போது ராஜபீமா படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஆரவ் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆரவுக்கு வாய்ப்பு வந்துள்ளது.

ஆனால் அப்போது ஆரவ், உதயநிதி ஸ்டாலின் படத்திற்காக உடம்பை ஏற்றி வேற கெட்டப்பில் இருந்தார். இதனால் எதற்கும் துணிந்தவன் படத்தில் ஆரவ் ஆல் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு நிறைய வில்லன் கதாபாத்திரம் வந்தாலும் அந்தக் கதை அவருக்கு பிடிக்கவில்லையாம். இருந்தபோதும் சூர்யா படத்தை தவறவிட்ட வருத்தத்தில் உள்ளார் ஆரவ்.

தற்போது ஆரவுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருவதால் இனிமேல் முழுநேர முயற்சியில் ஈடுபட்டு படங்கள் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சரியான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என ஆரவ் திட்டமிட்டுள்ளாராம். தற்போது ஆரவ் பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் கமிட் ஆகியுள்ளாராம்

Next Story

- Advertisement -