தமிழ் சினிமாவில் ஐட்டம் டான்ஸ் கண்டுபிடித்தது இவர்தான்.. எம்ஜிஆர் படத்தில் ஆரம்பித்த கலாச்சாரம்

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு பாட்டுக்கு  ஆடுவதை ட்ரண்டாக வைத்துள்ளனர். இயக்குனர் மிஷ்கின் ஆரம்பத்தில் தான் இயக்கும் படங்களில் இவ்வாறு ஒரு ஐட்டம் சாங்கை வைத்திருப்பார். அந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது ஐட்டம் பாடல்களுக்கு முன்னணி நடிகையாக உள்ளவர்களை தேர்ந்தெடுத்த நடிக்க வைக்கிறார்கள். அதற்கு பல கோடிகள் சம்பளம் ஆகவும் கொடுக்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

அந்தப் பாட்டுக்கு பல கோடி வரை சமந்தா சம்பளமும் பெற்று இருந்தார். அந்த பாட்டு வேற லெவலில் ஹிட்டானது. இதனால் தற்போது பல ஹீரோயின்களும் இதேபோல் ஒரு பாட்டுக்கு நடனமாடி வருகிறார்கள். இந்த கலாச்சாரம் இப்போது வந்ததில்லை.

எம்ஜிஆர் காலத்திலேயே இதைக் கொண்டு வந்தவர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான டிஆர் சுந்தரம் அவர்கள் தான். எம்ஜிஆர், பானுமதி நடிப்பில் 1956 ஆம் ஆண்டு வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு பம்பாயிலிருந்து வஹீதா ரஹ்மான் என்னும் நடிகையை வரவழைத்து குத்தாட்டம் போட வைத்தனர்.

இந்தப் படத்தில்தான் முதன் முதலில் ஐட்டம் சாங் கலாச்சாரம் வந்துள்ளது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் இசையை பல படங்களில் பயன்படுத்தியுள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற அழகான பொண்ணுதான் என்ற பாடலை நெஞ்சிருக்கும் வரை படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தில் அண்டங்காக்கா பாடல் இசை இந்த படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எம்ஜிஆரின் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் சினிமாவில் நிறைய பாடல்கள் மற்றும் இசை உருவாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்