புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

காசுக்காக மணி ஆட்டும் கூல் சுரேஷ்.. நாட்டாமை என்று நினைத்து செய்யும் கேவலமான வேலை

எந்த படம் ரிலீஸ் ஆனாலும் சரி யார் வருகிறார்களோ இல்லையோ உங்க அப்பா மவனே நான் வரேன் டா என முன்னாடி வந்து நிற்பவர் தான் இந்த  கூல் சுரேஷ். இவர் எதற்காக இந்த கீழ்த்தரமான வேலை செய்கிறார் என்றால், எல்லாம் பணத்திற்காக தான்.

இன்று ஒருவர் ஒரு செல்போனை வைத்து படம் எடுத்து விடலாம் அதை தியேட்டருக்கு கொண்டு வந்துவிடலாம். அதை பிரபல’படுத்துவதற்கும் பார்க்க ரசிகர்களை வரவேற்பதற்கும், இன்றைய வலைத்தள பிரபலங்களை நாட வேண்டியுள்ளது.

Also read: கட்டிப்புடிச்சி தடவிட்டே இருக்காங்க.. இது ஒரு நிகழ்ச்சியா? பிக்பாஸை கழுவி ஊற்றும் கூல் சுரேஷ் வீடியோ

இன்று ஒரு படம் ரிலீஸ் ஆனால் போதும் 100 யூட்யூபில் ஓடி வந்து மைக்கை நீட்டிக்கொண்டு இருக்கிறார்கள் படம் பார்த்து வருபவர்கள் படம் சரியில்லை என்று சொன்னால் அந்த மொத்த படமும் காலி.

அப்படி மக்கள் கருத்துக்களை மறைக்க வேண்டும் என்றால் ஒரு சில பிரபலங்களுக்கு பணம் கொடுத்து படம் பார்த்துவிட்டு வரும் சினிமா ரசிகர்கள் பேசுவதை தவிர்த்து விட்டு ஒரு சில பிரபலங்கள் பேசினால்  நல்லா இருக்கும் என திட்டம் போட்டு செயல்படுகின்றனர்.

Also Read: டி-ஷர்ட் போட்டு கும்முனு வந்த கீர்த்தி சுரேஷ்.. கம்முனு இருக்க முடியாமல் அவஸ்தைப்படும் ரசிகர்கள்

இப்படித்தான் அவர்கள் கையில் எடுத்த ஒரு ஐடியா சமூகவலைத்தளத்தில் பிரமாதமாக இருக்கும் நபர்கள். அப்படி வந்தவர்தான் இந்த கூல் சுரேஷ். இவர் பெயர் மட்டும்தான் அப்படி, ஆனால் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார் அதை வைத்துக்கொண்டு மக்களிடம் எளிதாக பப்ளிசிட்டி பெற்றுள்ளார்.

அந்த பப்ளிசிட்டியை வைத்துக்கொண்டு மொக்கை படத்தையும் நன்றாக இருக்கிறது என்று இவர் இஷ்டத்துக்கு பேசி வருகிறார். அப்படி பேசுவதற்காக ஒரு பெரும் தொகையையும் வாங்குகிறார். இவரை நம்பி பல பேர் இவரிடம் பேட்டி எடுத்து நன்றாக இருக்கும் படத்தையும் தப்பு தப்பாக ரிவ்யூ கொடுத்து வருகின்றனர்.

Also Read: சிம்பு ஸ்கூல் பையனா.. ஞாயிறு லீவு கேட்கிறார்.. கிண்டலடித்த படக்குழு

- Advertisement -

Trending News