டி-ஷர்ட் போட்டு கும்முனு வந்த கீர்த்தி சுரேஷ்.. கம்முனு இருக்க முடியாமல் அவஸ்தைப்படும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு தனுஷுடன் தொடரி, சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

வரிசையாக இவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்ற காரணத்தால் அடுத்ததாக விஜயுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து பைரவா மற்றும் சர்கார் படத்தில் நடித்தார்.

தற்போது இவர் நடிப்பில் திரைக்கு வெளிவர பல படங்கள் காத்திருக்கின்றன. அந்த வரிசையில் தெலுங்கு படமான குட்லக் மற்றும் மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த மரக்கர் மற்றும் தமிழில் செல்வராகவனுடன் சாணி காகிதம் ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.

keerthy suresh
keerthy suresh

தொடர்ந்து பல படங்களை தன் வசம் வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது துபாய்க்கு சென்றுள்ளார். துபாயில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டது மட்டுமல்லாமல் வடிவேலுவின் வசனமான ஹலோ துபாய் யா? என்னோட பிரதர் மார்க் இருக்காரா? ஓ நீ தான் பேசுறியா! ஹவ் ஆர் யூ? என வடிவேலுவின் வசனத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

keerthy suresh
keerthy suresh

வடிவேலுவின் வசனத்தை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் கமெண்ட் பாக்ஸில் கூல் டவுன் கூல் டவுன் என தங்களது பதில்களை பதிவு செய்து வருகின்றனர்.