குக் வித் கோமாளி சீசன்3 எப்போது தெரியுமா.. சீக்ரெட்டை உடைத்தால் வெங்கடேஷ் பட்!

விஜய் டிவியின் சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ரசிகர்களால் பார்க்கப்படும் குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி ஷோ இரண்டு சீசன்களில் வெற்றிகரமாக நிறைவு செய்து மூன்றாவது சீசன் தற்போது துவங்கியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் சமையல் தெரிந்த சினிமா பிரபலங்களும், அவர்களுக்கு இடையூறு செய்யும் கோமாளிகளாக ஒரு சில காமெடியர்களும் இணைந்து நிகழ்ச்சியை களைகட்ட செய்வார்கள். மேலும் நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டு சீசனையும் சமையல் வல்லுநர்களால் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக இருந்து சிறப்பித்தனர்.

இரண்டு சீசன்களில் கோமாளிகளாக பிரபலமான பாலா, புகழ், மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலம் அடைந்து வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளனர்.

ஆகையால் குக் வித் கோமாளி சீசன்3 குறித்த ப்ரோமோ வீடியோவிற்கான சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. ஆகையால் ரசிகர்கள் நிகழ்ச்சி துவங்கப்பட உள்ள நாட்களைக் குறித்து அதிக எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

Cook-With-Comali3-cinemapettai
Cook-With-Comali3-cinemapettai

குக் வித் கோமாளி சீசன்3 எப்பொழுது துவங்கப்படும் என்ற தகவலை நிகழ்ச்சியின் நடுவரான வெங்கடேஷ் பட் சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். அதில் வெங்கடேஷ் பட் பொங்கலன்று குக் வித் கோமாளி சீசன்3 துவங்கபடுவதாக மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.

ஆகையால் அடுத்த மாதம் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி3 நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். அத்துடன் இந்த சீசனிலும் ரசிகர்களுக்கு பிடித்தமான கோமாளிகள் இடம்பெற வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்