பெரிய இடத்தை பகைத்துக் கொண்ட மைக் மோகன்.. அப்பவே சிக்கல, இப்ப சிக்குவாரா.!

எண்பதுகளில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மோகன், 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சுட்டப்பழம் படத்தில் நடித்த பிறகு, சினிமாவை விட்டு விலகினார். தற்போது நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக விஜய் ஸ்ரீ  இயக்கியுள்ள ஹரா படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

மோகனுக்கு ஜோடியாக குஷ்பு ஜோடி சேர்ந்துள்ளார். இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக இருக்கும் என்று, சமீபத்தில் தமிழ் புத்தாண்டு அன்று வெளியான இந்தப்படத்தின் டீசரை பார்த்தாலே தெரிகிறது. இந்த படத்திற்கு மோகன் நிறைய உழைத்திருக்கிறார்.

அப்பவே ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்த மோகன் பல வருடங்களாக சினிமா துறையில் இருந்து விலகியிருந்தார். அவர் ஒரு சில படங்கள் நடித்தாலும் பெரிய அளவில் பெயர் பெறவில்லை. இதனால் அவரே படத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். இதனால் அவருடைய ரசிகர்கள் மோகனின் ரீ என்ட்ரிகாகவே காத்திருந்தனர்.

அதற்கேற்றாற்போல் இப்பொழுது இந்தப் ஹரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்து ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெரிய கட்சி மோகனுக்கு வலை விரித்து உள்ளது. எப்படியாவது தமிழ்நாட்டில் நம் கொடி பறக்க வேண்டும்.

அதற்கு இந்த மாதிரி நடிகர்களை வளைத்துப் போட வேண்டும் என்று மோகனை நாடி இருக்கிறது. ஆனால் மோகன், ‘நான் அப்பவே சிக்கல, இப்போ சிக்க வா போகிறேன்’ என்று எஸ்கேப் ஆகிவிட்டாராம். ஆனால் மைக் மோகன் அரசியல் பிரபலங்களை பகைத்துக்கொண்டு இருக்கிறாரா என சிலர் கிசுகிசுக்கின்றனர்.

எனவே இதே எண்ணத்தோடு நடிகர் மோகன், சினிமாவில் தன்னுடைய பயணத்தை மென்மேலும் தொடர்ந்து, ரசிகர்களுக்கு பிடித்தமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்தால், அவருக்கு என்று இருக்கும் ரசிகர் கூட்டத்தை தக்கவைத்து கோலிவுட்டில் ஒரு ரவுண்டு கட்ட அதிக வாய்ப்பிருக்கிறது.

Next Story

- Advertisement -