இந்த ட்விஸ்ட் நம்ம எதிர் பார்க்கவே இல்லை.. பாக்கியலட்சுமி சீரியலில் எல்லைமீறிய கோபி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தோழி ராதிகாவுடன் தொடர்பில் இருந்த கோபியின் தகாத உறவு தெரிந்ததும், பாக்யா அந்த துரோகத்தை கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்து ஆன கையோடு வீட்டிற்கு வந்த பாக்யா பெட்டி ஒன்றில் துணிகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்குகிறார்.

மகள் இனியா, மாமனார் உட்பட அனைவரும் பாக்யாவை வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என கெஞ்சுகின்றனர். ‘எல்லா தப்பையும் கோபி தான் செய்ததால் அவர் தான் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்’ என கோபியின் அப்பா சரியாக பேசுகிறார்.

இதைக் கேட்டதும் கொந்தளித்த கோபி, ‘இந்த வீட்டிற்காக 40 லட்சம் செலவழித்திருக்கிறேன். மிஷின் மாதிரி இந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக தினமும் 12 மணிநேரம் உழைத்திருக்கிறேன்.

இதுவும் பத்தாது ஏடிஎம் மிஷின் பணம் கொடுப்பது போல பாசத்தையும் கொட்ட வேண்டுமா!’ என தரம் தாழ்ந்து கோபி பேசுகிறார். உடனே எழில் ‘எதற்காக இவர்களிடம் அம்மா நியாயப்படுத்த வேண்டும்’ என பாக்யாவை வீட்டை விட்டு போகலாம் என்று கூப்பிடுகிறார்.

பிறகு இனியாவிடம் பாக்யா, ‘உனக்கு அப்பா வேண்டுமா இல்லை அம்மா வேண்டுமா’ என கேட்க, அழுதுகொண்டே இனியா, ‘நீங்கள் பிரிந்து இருந்தாலும் இருவரும் ஒரே வீட்டில் இருங்கள். எனக்கு இரண்டு பேரும் வேண்டும்’ என்கிறார்.

இதன்பிறகு காரசாரமான விவாதம் பாக்யா-கோபி இருவருக்கும் ஏற்பட்டு, பிறகு ஒரு கட்டத்தில் பெட்டியை வீட்டை விட்டு வெளியே எறிகிறார் பாக்யா. அதில் கோபியின் துணிகள் இருப்பதைக்கண்டு கோபி ஆத்திரத்தில் பாக்யாவை அடிக்கப் போகிறார். பாக்யாவின் மாமனார் கோபியை தடுப்பதுடன், கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்.

குடும்பமே இந்த விஷயத்தில் பாக்யாவிற்கு சப்போர்ட்டாக இருப்பதால், வேறுவழியில்லாமல் பெட்டியை எடுத்துக்கொண்டு கோபி நடையை கட்டுகிறார். ஒருபக்கம் சந்தோசத்தில் ராதிகா வீட்டிற்கு போய், அவருடன் சேர்ந்து வாழும் முடிவில் கோபி கிளம்புகிறார்.