18+ ஜோக், இரட்டை அர்த்தத்தில் பேசும் பிக் பாஸ் போட்டியாளர்கள்.. கடிவாளம் போடுவாரா கமல்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, துவங்கப்பட்ட நாளிலிருந்தே காரசாரமான விவாதங்களையும் சண்டை சச்சரவு உடன் இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது.

அத்துடன் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்ட இரண்டாவது டாஸ்க்கிலேயே காண்டம் பற்றி விவாதித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அப்போது வனிதா இந்த நிகழ்ச்சியை சிறுவர்களும் பார்க்க வாய்ப்பிருக்கிறது. அதனால் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இப்படி இதுவரை நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விட பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்கள், எல்லை மீறி நடந்துகொள்வதாக ரசிகர்கள் எண்ணுகின்றனர். அதற்கேற்றாற்போல் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் கேலி கிண்டலுக்கு என்று இரட்டை அர்த்தம் இருக்கும் வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

ஏனென்றால் தற்போது 80-களில் இருக்கும் கதாநாயகன் கதாநாயகியை போல் தங்களை மாற்றிக் கொண்டிருக்கும் அல்டிமேட் போட்டியாளர்கள் வகுப்பறையில் பாடம் படிப்பது போல் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் ஆசிரியராக இருக்கும் அனிதாவிற்கு மாணவர் நிரூப் காதல் கடிதம் எழுதுகிறார். இந்த காதலை ஏற்க மறுத்த அனிதா, ‘இவன் இருக்கிற உயரத்திற்கு எனக்கு லவ் லெட்டர் கொடுக்கிறான்’ என்று பாலாவிடம் முறையிடுகிறார். அதற்கு பாலா, ‘அவன் உங்க உயரத்திற்கு முழங்கால் போட்டுக் கொள்வான்’ என்று இரட்டை அர்த்தத்துடன் கமெண்ட் அடிக்கிறான்.

இவ்வாறு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜோக் என்ற பெயரில் போட்டியாளர்கள் அடிக்கும் லூட்டி ரசிகர்களால் சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் இரட்டை அர்த்தத்தில் பேசுவதை கமல் கண்டிப்பாரா.? என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்