பிக் பாஸ் சீசன் 6 ஒட்டு மொத்த சர்ச்சைகளின் லிஸ்ட்.. ரெட் கார்ட் கொடுக்க வேண்டியவருக்கு டிராபியா.?

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் சீசன் 6 பைனல் நடந்து முடிந்து அசீம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு 50 லட்சம் பரிசு தொகையை பெற்றார். ஆனால் இந்த வெற்றியை சோசியல் மீடியாவில் பிக் பாஸ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை. நியாயமாக இந்த வெற்றி விக்ரமன் அல்லது சிவின் இருவரும் ஒருவருக்கு தான் கிடைத்திருக்கணும் என்று தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்புகிறது.

அதிலும் இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 6ல் நடைபெற்ற ஒட்டுமொத்த சர்ச்சைகள் என்ன என்பதை பார்ப்போம். அக்டோபர் மாதம் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 21 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. இதுவரை நடந்து முடிந்த மற்ற சீசன்களை காட்டிலும் சீசன் 6 அரசியல் கொஞ்சம் அதிகமாகவே பேசினர். அதிலும் அரசியல்வாதி என அடையாளத்துடன் வெளிப்படையாக கலந்து கொண்ட விக்ரமன் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை வெளியிட்டு சகப் போட்டியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டார்.

Also Read: விரைவில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளி.. கோமாளிகளாக களமிறங்க உள்ள 7 பிரபலங்கள்

அசீம் சர்ச்சைக்குரிய வகையில் பல தர குறைவான வார்த்தைகள் மூலம் விக்ரமனை தாக்கி பேசி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் ஏதாவது ஒரு காதல் ஜோடி கனெக்ட் ஆகிவிடும். ஆனால் இந்த முறை காதல் கிசுகிசு எடுபடாமல் போனது. ஏனென்றால் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரக்ஷிதா இருவருக்கும் பிக் பாஸ் ரூட் போட்டு கொடுத்தாலும், அது ஒர்க் அவுட் ஆகாமல் போனது. ஆனால் அசல் கோலார் என்ற போட்டியாளர் நிவாஷினி, மகேஸ்வரி, ஆயிஷா உள்ளிட்ட பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டது சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அத்துடன் பிக் பாஸ் வரலாற்றில் அதிக குறும்படம் போட்டதும் சீசன் 6 நிகழ்ச்சியில் தான் பொம்மை டாக்ஸ், ஏஞ்சல்-ஏலியன்ஸ் போன்ற டாஸ்கின் போது கமல் குறும்படம் போட்டு காட்டினார். இதற்கு முந்தைய சீசன்களில் ஒரே ஒரு முறை மட்டுமே கமல் குறும்படம் போட்டிருக்கிறார். அதேபோல் பிக் பாஸ் வரலாற்றில் அதிக முறை கேப்டன் ஆன 3 முறை இருந்த யாஷிகா மற்றும் சினேகன் இருவரின் சாதனையை மணிகண்டா முறியடித்து இந்த சீசனில் 4 முறை கேப்டனாக இருந்திருக்கிறார்.

அதேபோல் பிக் பாஸ் சீசன் 6 முதல் முதலாக பணம் மூட்டை என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் வைக்கப்பட்டிருந்த 3 லட்சத்தை லாபகரமாக எடுத்துக்கொண்டு கதிரவன் வெளியேறியது அவருடைய புத்திசாலித்தனத்தை காட்டியது. அவரைத் தொடர்ந்து 11 லட்சத்துடன் அமுதவாணன் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இப்படி இந்த சீசனில் மட்டும்தான் இரண்டு முறை பணப்பெட்டி வைக்கப்பட்டது கூடுதல் சிறப்பாகும்.

Also Read: 2 நாள் ஆகியும் அசீமை விடாமல் துரத்தும் நெட்டிசன்கள்.. இவ்ளோ எதிர்ப்புக்கு இப்படி செஞ்சா தப்பிச்சிங்க

இதுவரை நடந்து முடிந்த சீசன்களை வைத்துப் பார்க்கும்போது ஏதாவது ஒரு போட்டியாளர்வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்து மறுபடியும் பிக் பாஸ் பைனல் லிஸ்ட் உடன் போட்டியிடுவார்கள். ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை. அதேபோல் இந்த முறை சிவின் மற்றும் தனலட்சுமி இருவரும் மக்கள் சார்பில் களமிறங்கிய மற்ற போட்டியாளர்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுத்தனர். அதைப்போல் விக்ரமன் தமிழ்நாடு பற்றி பேசியதும் இந்த சீசனில் பயங்கர வைரல் ஆனது.

மேலும் பிக் பாஸ் சீசன் 6 கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளராக பார்க்கப்பட்ட அசீம், 2-வது வாரத்தில் நடந்த ரேங்கிங் டாஸ்கின் போது விக்ரமின் மற்றும் ஆயிஷா இருவரையும் ஒருமையில் பேசி சர்ச்சைகள் சிக்கினார். இதனால் அவருக்கு நிச்சயம் ரெட் கார்ட் கொடுக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கமல் அவருக்கு எச்சரிக்கை மட்டுமே கொடுத்தார். கடைசியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு டிராபி கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அத்துடன் பிக் பாஸ் வீட்டில் பேக்கரி டாஸ் ஒன்று நடத்தப்பட்டது. அதில் தனலட்சுமி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் வார இறுதி நாட்களில் அவர் பணப்பெட்டியில் பணத்தை வைக்காத காரணத்தால் கமலஹாசன் தனலட்சுமியின் வெற்றி பறிக்கப்பட்டதாக அறிவித்து அதிர்ச்சியடைய வைத்தார்.

Also Read: நிஜ வாழ்க்கையில் உயிருக்கு போராடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்.. தனக்கு நேர்ந்தது யாருக்கும் நேரக்கூடாது!

மேலும் பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக பைனலுக்கு முன்னேறிய திருநங்கையாக சிவின் சாதனை படைத்தார். கடந்த சீசனில் நமிதா மாரிமுத்துவின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்த நிலையில் அவர் சில காரணங்களினால் திடீரென்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஆனால் அவருக்குப் பின் சிவின் மீது ரசிகர்கள் வைத்த நம்பிக்கையை அவர் கட்டிக் காப்பாற்றியது ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இருப்பினும் அவர் கடைசி நேரத்தில் எலிமினேட் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை தந்தது.

மேலும் பைனல் லிஸ்டில் இருந்த விக்ரமனுக்காக கடைசி நேரத்தில் அவருடைய கட்சித் தலைமை இடமே களம் இறங்கி வாக்கு சேகரித்த விஷயம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது இதற்கு முந்தைய சீசன் போட்டியாளர் வனிதா பெரும் கண்டனத்தை தெரிவித்தது சோசியல் மீடியாவை ரணகளமாக்கியது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்