பிரம்மாண்ட வீடு வாங்கிய பிக் பாஸ் பிரபலம்.. விஜய் டிவினாலே காரு, பங்களான்னு மாறும் லைஃப்ஸ்டைல்

விஜய் டிவில மட்டும் வாய்ப்பு கிடைச்சுட்டா போதும் என பலர் ஏங்குகிறார்கள். அதற்கு காரணம் விஜய் டிவிக்கு வந்தா எப்படியும் நாம்பல பெரிய ஆளா ஆக்கிவிடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கை. அப்படித்தான் சிவகார்த்திகேயன், சந்தானம் போன்ற பிரபலங்கள் வெள்ளித்திரையில் வந்து சாதித்து வருகின்றனர்.

இது ஒரு பக்கமிருக்க பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வனிதா தொடர்ந்து அந்த தொலைக்காட்சியிலே பல நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து புதிதாக கடை ஒன்று திறந்து அதிலும் கல்லா கட்டி வருகிறார்.

அதேபோல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கேப்ரில்லாவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஈரமான ரோஜா தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரும் சமீபத்தில் புதிதாக கார் வாங்கிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

தற்போது இவர்களை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அனிதா சம்பத் புதிதாக வீடு வாங்கிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது தன்னுடைய மிகப்பெரிய கனவு எனவும் பதிவிட்டிருந்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ஏராளமான பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் சன் டிவியில் செய்தி தொடர்பாளராக பணியாற்றிய அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானார். இந்நிகழ்ச்சியில் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தது. ஆனாலும் பல வாரங்கள் பிக்பாஸ் வீட்டிலேயே தாக்குப்பிடித்தார்.

இந்நிலையில் காப்பான், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் அனிதா சம்பத் நடித்திருந்தார். விமலுக்கு தங்கையாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அனிதா சம்பத் சொந்த வீடு வாங்கியதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு விஜய் டிவியில் உள்ள பல பிரபலங்கள் தங்கள் கனவுகளை நினைவாக்கி வருகின்றனர்.

Next Story

- Advertisement -