புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சன் டிவியில் 4 வருடங்களாக ஜொலித்த ஹீரோ.. விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு தாவிய பாரதி

Zee tamil New serial: ஒவ்வொரு சேனல்களும் புதுப்புது நாடகத்தை இறக்கி எப்படியாவது டிஆர்பி ரேட்டிங்கை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டி போட்டு வருகிறார்கள். ஆனாலும் சன் டிவி சீரியலுக்கு ஈடாக தற்போது வரை மற்ற சேனல்கள் வர முடியவில்லை. அத்துடன் சன் டிவியில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலே மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள்.

அதுவும் கதாநாயகனாக நடித்தால் அவர்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துவிடும். அப்படித்தான் சன் டிவி சீரியலில் ரோஜா நாடகத்தின் மூலம் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்த சிபு சூரியன் மிகவும் பிரபலமானார். இந்த நாடகம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக பிரேம் டைமில் ஒளிபரப்பாகி மக்களின் பெஸ்ட் நாடகம் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கியது.

இந்த நாடகம் முடிவடைந்த நிலையில், சிபு சூரியன் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா பார்ட் 2 நாடகத்தில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இந்த நாடகம் பெருசாக மக்களிடம் ரீச் ஆகவில்லை. அத்துடன் டிஆர்பி ரேட்டிங்கிலும் ரொம்பவே அடி வாங்கியது. அதனால் அவசர அவசரமாக கிளைமாக்ஸ் காட்சியை கொண்டு வந்து பாதியிலேயே நாடகத்தை முடித்து விட்டார்கள்.

Also read: மீனா கொடுத்த ஐடியாவால் ஒன்று சேரப்போக்கும் ராஜி கதிர்.. பாக்யா தலைமையில் நடக்கப்போகும் திருமணம்

அத்துடன் மறுபடியும் இந்த ஹீரோவை வேற சீரியலில் பார்க்க மாட்டோமா என்று ஏங்கி இருந்த மக்களுக்கு தற்போது ஒரு குட் நியூஸ் கிடைத்திருக்கிறது. இப்பொழுது இந்த நடிகர் ஜீ தமிழில் புதிய சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறார். அதாவது ஜீ தமிழில் “சிவமுருகன் டெக்ஸ்டைல்” என்ற நாடகம் தொடங்கப் போகிறது. இதில் மூன்று அண்ணன் தம்பிகளின் கதையை மையமாக வைத்து வரப்போகிறது.

இந்த சீரியலில் ஹீரோவாக ரோஜா சீரியலில் நடித்த அர்ஜுன் என்னும் சிபு சூரியன் கமிட்டாகி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜீ தமிழில் பேரன்பு சீரியலில் நடித்த வைஷ்ணவி நடிக்கப் போகிறார். இதனைத் தொடர்ந்து இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ள நேரம் மற்றும் மற்ற கதாபாத்திரங்களில் யார் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் கூடிய விரைவில் வெளியாகும்.

Also read: சக்தியை கழட்டிவிட்டு 4 மருமகள்களை தூக்கி நிறுத்தும் எதிர்நீச்சல்.. துணையாக நிற்கப்போகும் கதிர்

- Advertisement -

Trending News