செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சக்தியை கழட்டிவிட்டு 4 மருமகள்களை தூக்கி நிறுத்தும் எதிர்நீச்சல்.. துணையாக நிற்கப்போகும் கதிர்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் வீட்டில் உள்ள நான்கு மருமகளையும் தூக்கி நிறுத்துவதற்காக சக்தியை இந்த சூழலில் இருந்து கழட்டி விட்டார்கள். ஏற்கனவே இப்படித்தான் ஜீவானந்தத்தை கண்டுபிடிக்க ஜனனி போகும் பொழுது சக்திக்கு அம்மம் போட்டு போக முடியாமல் போய்விட்டது. ஜனனி மற்றும் தனியாக போய் ஜீவானந்தத்தின் பற்றிய ரகசியத்தை கண்டுபிடித்து வந்தார்.

அதேபோல தர்ஷினியை கண்டுபிடிப்பதற்கு நான்கு மருமகளுக்கு உதவியாக இருந்த சக்திக்கு தற்போது ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு வாரம் ஓய்வு எடுக்கும் மாதிரி சூழ்நிலை வந்துவிட்டது. இதற்கு அடுத்தபடியாக தர்ஷினியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதால் நான்கு மருமகள்கள் மட்டும் தனியாக போக முடிவெடுத்து விட்டார்கள்.

இதற்கு இடையில் ரேணுகாவிற்கு ஐஸ்வர்யா கால் பண்ணி பேசுகிறார். அப்பொழுது ஞானம் மற்றும் கதிர் அவர்களும் தர்ஷினியை தேடி விசாரிக்கிறார்கள் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் ஞானம் ஐஸ்வர்யாவிடம் யாரிடம் பேசுகிறாய் என்று கேட்கிறார். உடனே ஞானம் ரேணுகாவிடம் போனில் பேசுகிறார். நடந்த உண்மை அனைத்தும் ஞானத்துக்கு தெரிய வருகிறது.

Also read: ஜனனி ஈஸ்வரியை டைவர்ட் பண்ண சக்திக்கு கொடுத்த டார்ச்சர்.. மறைமுகமாக இருந்து ஆடு புலி ஆட்டத்தை ஆடும் கருப்பு ஆடு

பிறகு ஞானம் மற்றும் கதிரும் நான்கு மருமகளுக்கு துணையாக போய் தர்ஷினியை தேட வாய்ப்பு இருக்கிறது. அடுத்தபடியாக குணசேகரன், தர்ஷினி காணாமல் போனதற்கு கண்மூடித்தனமாக ஜீவானந்தம் தான் காரணமாக இருப்பார் என்று நினைக்கிறார். அதற்காக தற்போது ராமசாமி மற்றும் கிருஷ்ணாமிடம் உதவி கேட்கிறார்.

ஆனால் அவர்கள் தான் தர்ஷினியை கடத்திருக்கிறார்கள் என்பது குணசேகருக்கு தெரியாததால் அவர்களிடமே உதவி கேட்கிறார். இந்த நேரத்தில் இவர்கள் குணசேகரனிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இன்னும் இரண்டு நாட்களுக்குள் தர்ஷினியை கூட்டிட்டு வந்து விடுகிறோம் என்று சொல்கிறார்கள்.

அடுத்தபடியாக ஜீவானந்தம் களத்தில் இறங்கிய பிறகுதான் எல்லாத்துக்கும் காரணமானவர்கள் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி என்கிற உண்மையை கண்டுபிடிக்க போகிறார். அத்துடன் இவர்கள் உண்மையான முகத்திரையும் ஜனனிக்கு தெரிய வரப்போகிறது. அதற்குள் குணசேகரனை தன் கைக்குள் போட்டு விட வேண்டும் என்பதற்காக தான் இது அத்தனையும் செய்திருக்கிறார் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி.

Also read: தர்ஷினியை கடத்தியதில் 4 கும்பல்கள் மீது ஏற்படும் சந்தேகம்.. எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் காப்பாற்றிய ஜனனியின் தோழர்

- Advertisement -

Trending News