மீனா கொடுத்த ஐடியாவால் ஒன்று சேரப்போக்கும் ராஜி கதிர்.. பாக்யா தலைமையில் நடக்கப்போகும் திருமணம்

Bhakkiyalakshmi and Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சேர்ந்து சங்கமாக இந்த வாரமும் தொடர்கிறது. இதில் ராஜிக்கு வீட்டில் ஏற்பாடு பண்ணின திருமணத்தின் விருப்பம் இல்லாததால் காதலித்தவருடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஆனாலும் காதலனின் வற்புறுத்தலக்காகத்தான் ராஜி இந்த முடிவை எடுத்தார்.

பிறகு இவர்கள் திருச்செந்தூருக்கு போய் கல்யாணம் பண்ணலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள். அதற்காக அங்கே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து இருக்கிறார்கள். இதற்கிடையில் ராஜியை கூப்பிட போன காதலன் வீட்டில் இருக்கும் நகை அத்தனையையும் எடுத்துட்டு வந்துட்டார். அதனால் நகை மட்டும் போதும் என்று அதே ஹோட்டலில் ராஜியை தனியாக விட்டுவிட்டு ஓடிப் போய் விடுகிறார்.

தனியாக இருக்கும் ராஜியை கோமதி பார்த்துவிடுகிறார். பின்பு நடந்த விஷயங்கள் அனைத்தும் தெரியவரும் பொழுது மீனா, கதிருக்கும் ராஜுக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார். இதை கேட்ட கோமதி, பாண்டியனை நினைத்து வேண்டாம் என்று மறுக்கிறார். பிறகு திரும்பி ராஜ்ஜிய இப்படியே வீட்டிற்கு கூட்டிட்டு போனால் குடும்பத்திற்கு தேவையில்லாத அவமானம் ஏற்பட்டு விடும் என்பதினால் ஓகே சொல்லிவிடுகிறார்.

Also read: சக்தியை கழட்டிவிட்டு 4 மருமகள்களை தூக்கி நிறுத்தும் எதிர்நீச்சல்.. துணையாக நிற்கப்போகும் கதிர்

இதற்கிடையில் ராஜி இக்கட்டான சூழ்நிலையில் காதலனுடன் மாட்டிய தருணத்தில் பாக்கியா தான் காப்பாற்றுகிறார். அதனால் பாக்கியா தலைமையில் கதிர் மற்றும் ராஜிக்கு திருமணம் திருச்செந்தூர் கோயிலில் வைத்து நடைபெறுகிறது. ஆனால் வீட்டில் ராஜியை காணும் என்ற பரபரப்புடன் ஒட்டு மொத்த குடும்பமும் அவஸ்தை பட்டு வருகிறார்கள்.

பிறகு வீட்டிற்கு திரும்பி வரும் கோமதி, மீனா, கதிர் மற்றும் ராஜியை பார்த்ததும் பாண்டியன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து ஆட்டம் ஆட போகிறார். அதே மாதிரி கோமதியின் அண்ணன்களும் ராஜியை வெறுக்கப் போகிறார்கள். ஆக மொத்தத்தில் வீட்டில் மூத்த மகன் சரவணன் தவிர மற்ற இரண்டு மகன்களுக்கும் கல்யாணம் நடந்து விட்டது. அத்துடன் இந்த வாரத்துடன் இரண்டு நாடகத்தின் சங்கமும் முடிவடைய போகிறது.

Also read: கிடைக்கிற கேப்பில் ஆட்டைய போட நினைக்கும் விஜயா.. முத்துவிடம் வசமாக சிக்க போகும் ரோகிணி

- Advertisement -spot_img

Trending News