புதன்கிழமை, நவம்பர் 13, 2024

ஜவ்வாக இழுக்கும் பாரதிகண்ணம்மா.. ஜெட் வேகத்தில் போகும் பாக்கியலட்சுமி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா தொடர் சில வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் மொத்த கதையும் முடிந்துவிடும்.

ஆனால் அதை மட்டும் எடுக்காமல் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பாரதி, கண்ணம்மா இருவருக்கும் காதல் வருவது போல அதே கதையை ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் ரசிகர்களுக்கு தற்போது பாரதிகண்ணம்மா தொடர் மீது எரிச்சல் வந்துள்ளது.

இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு தொடர்தான் பாக்கியலட்சுமி. இதிலும் கோபி பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவுடன் பழகி வருகிறார். ராதிகாவுக்கும் பாக்யாவின் கணவன் கோபி தான் என்பது தெரியாமல் உள்ளது.

சமீபத்தில் பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தியின் பிறந்தநாளை கொண்டாட வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு கோபி ராதிகாவுடன் பழகி வருவது தெரிந்த நிலையில் இன்னும் பாக்கியலட்சுமி குடும்பத்திற்கு இந்த விஷயம் தெரியாமல் இயக்குனர் கதையை இழுத்துக் கொண்டே சென்றிருந்தார்.

இந்நிலையில் யார் மூலமாக ராதிகாவுக்கு இந்த விஷயம் தெரிய வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் நிறைந்திருக்கிறது. அதாவது கோபி குடித்துவிட்டு ராதிகா வீட்டிற்கு சென்று தானும் பாக்கியாவும் உள்ள போட்டோவை காண்பித்த இதுதான் என்னோட ஃபேமிலி போட்டோ எனக் காண்பிக்கிறார்.

பாக்யா தான் கோபியின் மனைவி என தெரிந்ததும் ராதிகா நிலைகுலைந்து போகிறார். பாரதிகண்ணம்மா இயக்குனர் போல பாக்கியலட்சுமி தொடர் இயக்குனரும் ஜவ்வாக இழுப்பார் என நினைத்த நிலையில் ஜெட் வேகத்தில் கோபியை வைத்தே இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதனால் ராதிகா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற சுவாரசியமான கதைக்களத்துடன் பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News