விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் கடந்த சில நாட்களாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. டாக்டர் பாரதி, கண்ணம்மாவின் உதவியுடன் குழந்தைக்கு பொருத்த வேண்டிய இதயத்தை ஆம்புலன்சில் எடுத்து கொண்டு வருகிறார்.
அதற்கிடையில் மழை, புயல் என்று ஏகப்பட்ட தடங்கல்கள் வந்தது. இருந்தாலும் பாரதி அதையெல்லாம் சமாளித்து மருத்துவமனையை வந்தடைகிறார். பழைய திரைப்படங்களில் வருவது போன்று பரபரப்பாக காட்டப்பட்டு வந்த காட்சிகள் தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. டாக்டர் பாரதி அந்த இதயத்தை வெற்றிகரமாக குழந்தைக்கு பொருத்துவது போன்ற காட்சிகள் இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கிறது.
இதனால் ஒட்டுமொத்த மக்களும், பத்திரிக்கையாளர்களும் பாரதியை பாராட்டி பேசுகின்றனர். அப்போது பேசிய பாரதி இப்படி ஒரு சாதனைக்கு பக்கபலமாக இருந்தது எங்கள் ஹாஸ்பிடல் அட்மின் ஆபீசர் கண்ணம்மா தான் என்று கூறுகிறார்.
இதைக்கேட்டு கண்ணம்மா மற்றும் பாரதியின் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். சுற்றியிருக்கும் மக்களும் பலத்த கரகோஷம் எழுப்புகின்றனர். இதன் மூலம் கடந்த சில வாரங்களாக பரபரப்பு என்ற பெயரில் படு மொக்கையாக காண்பிக்கப்பட்ட இந்த காட்சிகள் முடிவடைந்துள்ளது.
கதையை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் இயக்குனர் பழைய படங்களை எல்லாம் பார்த்து அதில் இருக்கும் காட்சிகளை வைத்து சீரியலை ஓட்டி வருகிறார். இதனால் பாரதிகண்ணம்மாவை ஆவலுடன் பார்த்து வந்த ரசிகர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைந்துள்ளது.
மேலும் இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் வெளிப்படையாகவே கதற ஆரம்பித்து உள்ளனர். அந்த அளவுக்கு படு போராக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் இனி வரும் வாரங்களில் இன்னும் என்ன அக்கப்போர் செய்யப் போகிறதோ என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.