ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அச்சு அசல் எம்ஜிஆர் போலவே இருக்கும் பாக்யாவின் கணவர் கோபி.. புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்!

பல பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு இல்லாத போது சீரியலில் நடித்து வருகின்றனர். விஜய் டிவியின் பிரபல சீரியலான பாக்கியலட்சுமி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த சீரியல் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. கிட்டத்தட்ட 250 எபிசோடுகளை கொண்டது பாக்கியலட்சுமி சீரியல்.

இந்த சீரியலில் பாக்கியவின் கணவனாக நடித்துள்ள சதீஷ்குமார்(Gopi) எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாக்யாவின் கணவராக நடித்துள்ள கோபி எம்ஜிஆரின் பயோபிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எம்ஜிஆர் போல அச்சு அசலாக இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

சீரியல் கதையை பொறுத்த வரை மனைவிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கும் கோபியை நெட்டிசன்கள் கழுவி ஊற்றினாலும் இந்த விஷயத்தை பாராட்டி வருகின்றனர்.

bagyalakshi-mgr
bagyalakshi-mgr
- Advertisement -

Trending News