விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் எந்த தவறும் செய்யாத போதும் பாக்யாவின் பிஸ்னஸ் தவறான வதந்தியினால் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்து, இழுத்து மூடும் அளவுக்கு வந்துவிட்டது.
எனவே இதை எப்படி சரி செய்ய வேண்டும் என பாக்யா குழம்பித் தவித்துக் கொண்டிருக்கும்போது, எழிலுக்கு ஒரு யோசனை வருகிறது. அதாவது பாக்யாவின் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வருவதால் அவருக்கு காலை உணவை பாக்யா தயாரிக்கிறார்.
எழில் பாக்யாவிடம், ஒரு மணி நேரத்தில் உன்னால் எத்தனை வகையான உணவுகளை செய்ய முடியும் என்று கேட்க, உடனே பாக்யா சுமார் 30 வகையான உணவுகளை சமைக்க முடியும் என்று கூறுகிறாள்.
உடனே இந்த சமயத்தை சரியாக பயன்படுத்தி அவள் சமைத்ததை அப்படியே வீடியோ எடுத்து அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்வதன் மூலம் பாக்யாவின் சமையலை ட்ரெண்டாக்கி அதன் மூலம் மறுபடியும் பாக்யாவின் பிசினஸ் துளிர் விட வாய்ப்பிருக்கிறது என எழில் நம்புகிறான்.
இதேபோன்றுதான் எழில் பாக்யாவின் பிசினஸ் துவங்குவதற்கு சோசியல் மீடியாவை பயன்படுத்தினான், அதைப் போன்றே தற்போது உருவாக்கப் இருக்கும் வீடியோவை வைத்து பாக்யாவின் பிசினஸை ஓஹோன்னு வளர செய்யப்போகிறான்.
அதுமட்டுமின்றி பாக்யாவின் இந்த திறமையை அங்கீகரிக்கும் விதத்தில் கின்னஸ் ரெக்கார்டு உள்ளிட்ட சாதனைகளுக்கு பரிந்துரைக்கவும் எழில் முடிவெடுக்கிறாள். எனவே எழிலின் இந்த முயற்சி வெற்றி பெற்று பாக்யா சிறந்த தொழிலதிபராக இனிவரும் நாட்களில் சிங்கப் பெண் போல் சீரியலில் வீரநடை போட போகிறாள்.