60களில் வில்லியாக ஆட்சி செய்த 2 நடிகைகள்.. நீலாம்பரி, கோமலவள்ளி இவங்க முன்னாடி ஒன்னுமே இல்ல

இப்போதைய தமிழ் சினிமாவில் ரம்யா கிருஷ்ணன், வரலட்சுமி போன்ற நடிகைகள் தங்களுடைய வில்லத்தனமான நடிப்பால் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றனர். ஆனால் அந்தக் காலத்திலேயே இவர்களை மிஞ்சும் அளவுக்கு தங்களுடைய வில்லத்தனத்தால் மிரட்டிய நடிகைகளும் உண்டு.

அப்போதைய தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறந்து விளங்கியவர் நம்பியார். அவரைப்போலவே பெண்களில் வில்லி கதாபாத்திரத்தை தாங்கிப்பிடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியவர்கள் பிஎஸ் ஞானம் மற்றும் சி கே சரஸ்வதி இருவர் தான்.

அப்போதெல்லாம் வில்லி வேடத்தில் நடிக்க வேண்டுமென்றால் பலரும் இவர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள். இவர்களின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த பல தயாரிப்பாளர்களும் உண்டு. இவர்களில் பிஎஸ் ஞானம் பாசமலர் திரைப்படத்தில் சாவித்திரிக்கு மாமியாராக நடித்திருப்பார்.

அதில் சாவித்திரியை இவர் பல கொடுமைகள் செய்வார். தேள் கொட்டுவது போல் இவர் பேசும் பேச்சு நிஜவாழ்க்கையில் நடப்பது போன்றே இருக்கும். இதை பார்த்த பல இல்லத்தரசிகளும் இவரை திட்டி தீர்த்த கதைகள் ஏராளம். அந்த அளவுக்கு இவர் தன்னுடைய நடிப்பில் எதார்த்தத்தை கொண்டு வந்தவர்.

இப்படி வில்லியாக பல திரைப்படங்களில் நடித்த இவர் ஒரு விபத்தினால் தன்னுடைய 41 வது வயதிலேயே மரணமடைந்தார். இது திரைத்துறைக்கு ஏற்பட்ட பெரிய இழப்பாக கருதப்பட்டது. இவரைத் தொடர்ந்து சி கே சரஸ்வதி தில்லானா மோகனம்பாள் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லியாக நடித்து புகழ் பெற்றுள்ளார்.

அதில் இவர் காமெடி கலந்த வில்லியாக நடித்து இருப்பார். அதே போன்று பல திரைப்படங்களில் இவர் சூனியக்காரி, கொடுமைக்கார மாமியார் போன்ற பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர்களின் அலட்டல் பேச்சும், திமிரான பார்வையும் அந்த கேரக்டருக்கு ரொம்ப பொருத்தமாக அமைந்தது. அவர்களின் நடிப்பை வைத்து பார்க்கும்போது இப்போதிருக்கும் நடிகைகளின் வில்லத்தனம் கொஞ்சம் குறைவுதான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்