பிக்பாஸ் அல்டிமேட்லிருந்து வெளியேறும் அடுத்த நபர்.. அந்த சீசன்லேயே இவங்க டம்மி பீஸா இருந்தாங்க

ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் தொடக்க நாளன்று, அடுத்த வாரம் வெளியேறும் நபரை தேர்வு செய்வதற்கான நாமினேஷன் லிஸ்ட் ரெடி ஆகும்.

அந்தவகையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் பாலாஜி முருகதாஸ், சினேகன், சுருதி, ஜூலி ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் பாலாஜி முருகதாஸ் மற்றும் ஜூலி, சினேகன் ஆகிய 3 பேரும் மக்கள் அளித்த ஓட்டின் அடிப்படையில் தப்பித்து, மீதமிருக்கும் சுருதி குறைந்த ஓட்டங்களுடன் வெளியேற போகிறார்.

சுருதி ஏற்கனவே பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தாமரையிடம் நாணயத்தை தவறான முறையில் அபகரித்ததால் அப்பொழுது இருந்தே இப்பொழுது வரை பிக்பாஸ் ரசிகர்களுக்கு பிடிக்காத போட்டியாளராகவே இருந்து கொண்டிருக்கிறார்.

இருப்பினும் அவருடைய தைரியமான விளையாட்டு ஒருசில ரசிகர்களுக்குப் பிடித்திருக்க வாய்ப்பிருக்கிறது. அத்துடன் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியை விட அல்டிமேட்டில் சுருதி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாமல் சுவாரஸ்யம் குறைவாகவே விளையாடிக் கொண்டிருக்கிறார்.

எனவே அவரே இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது. அத்துடன் இந்த வாரம் டபுள் எரிக்சன் நடைபெறவும் வாய்ப்புள்ளது. அப்படி இருந்தால் சினேகன் மற்றும் சுருதி இருவரும் அடுத்து வெளியேறும் இரண்டு நபர்களாக இருக்கப் போகின்றனர்.

இருப்பினும் வரும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் அளிக்கும் ஓட்டில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்து நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் நான்கு பேரில் யார் வெளியேற போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.