பண மோசடியில் பாலாவை ரவுண்டு கட்டிய தயாரிப்பாளர்.. விவாகரத்துக்கு பின் அடுத்தடுத்து விழும் அடி

இயக்குனர் பாலா தற்போது சூர்யாவை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் தயாராகாததால் ஏதேதோ எடுத்துக்கொண்டிருக்கிறார் என சூர்யா கடுப்பாகி, அந்த சூட்டிங்கில் இருந்து பாதியில் இருந்து கிளம்பி, தற்போது சிறுத்தை சிவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சூர்யா மட்டுமல்ல பாலா படத்தில் நடிக்கும் நடிகர், தயாரிப்பாளர்கள் இடையே அவ்வப்போது அவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுண்டு. கோபம் அதிகமாக இருக்கும் நபராக தெரியும் பாலா மட்டுமல்ல, அவருடைய படங்களுமே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

Also Read: கேவலமாக நடந்து கொண்ட பாலா.. ஆவேசப்பட்டு உண்மையை உடைத்த பிரபலம்

இப்படி தன்னுடைய படங்களில் இருக்கும் பிரபலங்களுடன் கருத்து மோதலில் ஈடுபடும் பாலா, தற்போது பல லட்சம் பண மோசடியில் சிக்கியிருக்கிறார். 2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் சூர்யா, விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தை வி ஏ துரை தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் சூட்டிங் நேரத்தில் இருவருக்கும் பாலாவிற்கும் பல பிரச்சினைகள் வந்திருந்தது. பின்னர் படம் சூப்பர் ஹிட் அடித்து, பிறகு அவர்களுக்குள் இருந்த மனஸ்தாபம் விலகி இருவரும் நட்பாய் மாறினர்.

படத்தின் சக்சஸ் மீட்டிங்கில் தயாரிப்பாளர் துரை பாலாவிற்கு தங்கச் சங்கிலி அணிவித்து கவுரவித்தார். அந்த நேரத்தில் அடுத்த படத்தின் அட்வான்ஸ் தொகையான ரூபாய் 10 லட்சத்தை பாலாவிடம் கொடுத்துள்ளார்.

Also Read: ஹீரோயின்களை வேறு மாதிரி யோசிக்கும் பாலா.. இது நம்ம லிஸ்டுலயே இல்லையே

ஆனால் அதை பாலா இன்னும் கொடுக்கவில்லை. இப்படியே அந்த தொகையை வட்டி போட்டு 25 லட்சம் ஆனதாம். இப்போது கஷ்டத்தில் இருக்கும் துரை அந்த காசை கேட்டு பாலாவின் வீட்டில் போய் சண்டை போட்டுள்ளார். அந்தக் காசைக் கொடுத்தால் மட்டுமே போவேன் என்று வீட்டிலும் தர்ணா போராட்டம் செய்கிறாராம்.

அடுத்தவர் காசு நமக்கு எதுக்கு என்ற நினப்பு பாலாவுக்கு இருந்திருந்தால் 19 வருடத்திற்கு முன்பு வாங்கிய பணத்தை இவ்வளவு நாளாக வைத்திருக்க மாட்டார். அதுவும் இப்போது அவர் கஷ்டத்தில் இருக்கிறார் என தெரிந்தும் அவர் கேட்டும் கொடுக்காமல் இருக்கும் பாலா குறித்து பெரிதும் விமர்சிக்கின்றனர். ஏற்கனவே பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டிருக்கும் பாலா, தற்போது பல லட்ச ரூபாய் மோசடியிலும் ஈடுபட்டிருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Also Read: எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்திய பாலா.. சினிமாவை விட்டு சீரியலுக்கு வந்த நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்