ஹீரோயின்களை வேறு மாதிரி யோசிக்கும் பாலா.. இது நம்ம லிஸ்டுலயே இல்லையே

இயக்குனர் பாலா தற்போது சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நன்றாக சென்று கொண்டு இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நடுவே பல பிரச்சினைகள் வந்து படம் நின்று விட்டது என்றெல்லாம் ஒரு பேச்சு திரையுலகில் பேசப்பட்டு வந்தது.

ஆனால் இப்போது இந்தப் படம் பிரச்சனை எல்லாம் தீர்ந்து சூட்டிங் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்திற்காக பாலா இதுவரை தான் செய்யாத ஒன்றை செய்திருக்கிறாராம். பொதுவாக பாலா திரைப்படம் என்றால் அதில் ஒரு ரியாலிட்டி இருக்கும்.

அதற்காக படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயினை ஒட்டுமொத்தமாக வேறு ஆள் போன்று மாற்றி விடுவார். உதாரணத்திற்கு பிதாமகன் திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் அதில் விக்ரமை முற்றிலும் வேறு மாதிரியாக காட்டியிருப்பார். அதேபோன்று அவன் இவன் திரைப்படத்தில் விஷாலின் தோற்றமும் வித்தியாசமாக இருக்கும்.

இப்படி ஹீரோக்கள் மட்டுமல்லாமல் ஹீரோயின்களையும் அவர் அந்த கதாபாத்திரமாக மாற்றி விடுவார். அந்த வகையில் நான் கடவுள் படத்தில் பூஜாவை அந்த கேரக்டருக்கு ஏற்றார் போன்று அப்படியே மாற்றி இருந்தார். சுருக்கமாக சொல்லப்போனால் அழகாக இருக்கும் ஹீரோயின்கள் பாலா படத்தில் அழுக்காக தான் காட்சி தருவார்கள்.

ஆனால் பாலா இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் அதுபோன்று எதுவும் செய்யவில்லையாம். தெலுங்கில் பிரபலமாக இருக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதில் பாலா கீர்த்தியை தேவதை போல் காட்டி வருகிறாராம். இதைப் பார்த்த பட குழு இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்றும், இது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்றும் மிகவும் ஆச்சரியப்பட்டு பேசி வருகிறார்களாம்.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -