வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

வாயில் புடவையைக் கவ்வி கொண்ட கோபி.. ராதிகாவுடன் எல்லை மீறும் வைரல் புகைப்படம்

விஜய் டிவியில் டிஆர்பி நல்ல இடத்தைப் பிடித்த தொடர்தான் பாக்கியலட்சுமி. அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை எதார்த்தமாக வெளிகாட்டி இருப்பார் இயக்குனர். இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் பாக்யா குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்கிறார். இவரது கணவர் கோபி அப்பாவின் வற்புறுத்தலால் பாக்கியாவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு செழியன், எழில் என இரு மகன்களும் இனியா என்ற மகளும் உள்ளார்.

கோபி பள்ளிப்பருவத்தில் இருந்தே ராதிகா என்ற பெண்ணை காதலித்து வந்தார். அப்பாவின் கட்டாயத்தால் பாக்கியாவை விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டதால் கோபி பாக்கியா மீது வெறுப்பை காட்டுவார். கோபியின் கோபத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாத பாக்கியா குடும்பத்தின் மீது மிக அக்கறையாக நடந்து கொள்வார்.

இந்நிலையில் ராதிகாவுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி மயூரி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இதைப் பயன்படுத்தி கோபி ராதிகாவுக்கு உதவி செய்கிறார். பாக்கியாவும், ராதிகாவும் நல்ல தோழிகள் என்பதால் கோபி குடும்பத்திற்கு தெரியாமல் ராதிகாவை சந்தித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் கோபி எப்போது மாற்றிக்கொள்வார் என ஆர்வமுடன் இருந்தார்கள்.

இந்நிலையில் கோபியும், ராதிகாவும் கோயிலுக்கு சென்றிருக்கும் போது எதர்ச்சையாக அங்கு வந்த கோபியின் அப்பா இருவரையும் பார்த்து விடுகிறார். இதனால் பல நாள் ரசிகர்களின் கோரிக்கையை நிறைவு செய்தார் இயக்குனர். கோபி அப்பாவிற்கு கோபியின் காதலிதான் ராதிகா தெரிந்தும், ராதிகாவுடன் பழகி வருகிறார் கோபி.

பாக்கியலட்சுமி இன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபி, ராதிகாவுடன் இருக்கும் போட்டோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை எரிச்சல் ஊட்டுகிறார். இதனால் கோபியின் விளையாட்டிற்கு எல்லையே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறார்.

கோபியும் , ராதிகாவும் பழகுவது பாக்கியாவிற்கு தெரிந்தால் என்னவாகும் என ரசிகர்கள் வரும் எபிசோடுகளை பார்ப்பதற்காக ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். மல்லிப்பூ, காதில் ஜிமிக்க.. மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி!

gopi-bhagkiyalaxmi
gopi-bhagkiyalaxmi
- Advertisement -

Trending News