செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பாக்கியலட்சுமியின் சொந்த மகளை பார்த்தீர்களா?

இல்லத்தரசிகளின் கதையை பிரதிபலிக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இத்தொடருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பாக்கியலட்சுமி தொடர், எதார்த்த வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை சீரியலாக எடுக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் இல்லத்தரசியாக நடித்திருக்கும் பாக்கியலட்சுமி தான் நடிகை சுசித்ரா. இவருடைய எதார்த்தமான நடிப்பு எல்லோராலும் ஈர்க்கப்படுகிறது. ஒரு இல்லத்தரசியாக வீட்டில் பல கஷ்டங்கள் தாண்டி வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறாள் என்பதே பாக்கியலட்சுமின் கதை.

சுசித்ரா கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்பு கன்னடம்,தெலுங்கு மொழிகளில் பல தொடர்களில் நடித்துள்ளார். அங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உள்ளது.

பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் டப்மேஷ் எடுத்து இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சுசித்ரா.

baakiyalakshmi-serial
baakiyalakshmi-serial

சுசித்ரா தற்போது நிஜ மகளுடன் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். சுசித்ரா ரசிகர்களிடையே இந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

- Advertisement -

Trending News